அபுதாபி: டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 3) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சியான மனநிலையில் காணப்பட்டார். 32 வயதான கோஹ்லி பிரபல பாலிவுட் பாடலுக்கு (Bollywood Song) நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அபுதாபியில் முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணிக்கு (Team India) வாய்ப்பு கிடைத்தது. டாப்-4 பேட்ஸ்மேன்களின் வலுவான ஆட்டத்தால் இந்தியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை எதிரணி எட்டாமல் நிறுத்த வேண்டிய பொறுப்பு இந்திய பந்துவீச்சாளர்களிடம் இருந்தது. இந்தப் போட்டியின் போது விராட் கோஹ்லி (Virat  Kohli) பவுண்டரி லைனில் சின்னதா ஒரு நடன ஸ்டெப்ஸ் போட்டு பார்வையாளர்களை மகிழ்வித்தார்.


பாலிவுட் படமான ராம் லக்கானின் 'மை நேம் இஸ் லக்கன்' என்ற பாடல் மைதானத்தில் ஒலித்த உடனேயே, இந்திய கேப்டனின் கால்கள் நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர் அந்த பாட்டுக்கு நடனம் ஆடினார். மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் கோஹ்லி நடனம் ஆடுவதை கண்டு அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி அடைந்து இந்திய கேப்டனை ஆரவாரம் செய்தனர். 


ALSO READ |  தவானின் பேட்டிங் ஸ்டைலை நையாண்டி செய்த கேப்டன் விராட் கோலி -வீடியோ வைரல்


விராட் கோலியின் இந்த வீடியோ (Virat Kohli Dance Video) சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் என்பதில் சந்தேகமில்லை. 2016 டி20 உலகக் கோப்பை (T20 World Cup 2016 ) தொடரின் போதும், அப்போது விராட் கோலி பாலிவுட் நடிகர் அனில் கபூரின் பாடலுக்கு நடனமாடினார்.


 



ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 144 ரன்களுக்கு ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்தினர். ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் வலுவான மறுபிரவேசம் செய்து நான்கு ஓவர்களில் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நம்பிக்கை அப்படியே உள்ளது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் இன்று (வெள்ளிக்கிழமை) விளையாடுகிறது.


ALSO READ |  5 ஆண்டுகளுக்குப் பிறகு, டி20 போட்டியில் பந்து வீசிய விராட் கோலி: Viral Video


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR