தவானின் பேட்டிங் ஸ்டைலை நையாண்டி செய்த கேப்டன் விராட் கோலி -வீடியோ வைரல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட், தனது அணியின் சக கிரிக்கெட் வீரரான ஷிகர் தவானின் (Shikhar Dhawan Batting) பேட்டிங்கை கலாய்த்து வீடியோ பகிர்ந்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 19, 2021, 02:36 PM IST
  • கோலியின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • கைகளை உயர்த்தி கோஹ்லி பேட்டிங் செய்வதை வீடியோவில் காணலாம்.
  • டி-20 உலகக் கோப்பை 2021 தொடரில் ஷிகர் தவான் இடம் பெறவில்லை.
தவானின் பேட்டிங் ஸ்டைலை நையாண்டி செய்த கேப்டன் விராட் கோலி -வீடியோ வைரல் title=

புது டெல்லி: விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 2021 ஐசிசி டி 20 உலகக் கோப்பையின் (ICC T20 World Cup 2021) முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி, ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது.

புதன்கிழமை நடைபெறும் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டிக்கு முன், விராட் கோலியின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி (Virat Kohli Video Viral) வருகிறது. விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோவில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட், தனது அணியின் சக கிரிக்கெட் வீரரான ஷிகர் தவானின் (Shikhar Dhawan Batting) பேட்டிங்கை கலாய்த்து வீடியோ பகிர்ந்துள்ளார்.

ஷிகர் தவான் (Shikhar Dhawan) எப்படி பேட்டிங் செய்வார், அவர் பேட்டிங் செய்யும் ஸ்டைல், பந்து வரும் போது எப்படி எதிர்கொள்வார், அந்த சமயத்தில் அவர் எடுக்கும் நிலைப்பாடு மற்றும் கப்பர் (கூல் கேப்டன் தோனி, தாதா கங்குலி, ஹிட்மேன் ரோஹித் சர்மா வரிசையில், ஷிகர் தவானை கப்பர் (Gabbar) என்று செல்லமாக அழைப்பது உண்டு) பாணியில் கைகளை உயர்த்தி கோஹ்லி பேட்டிங் செய்வதை வீடியோவில் (Virat Kohli mimics Shikhar Dhawan Video) தெளிவாகக் காணலாம். 

 

இந்த வீடியோவை பகிர்ந்து ஷிகரை டேக் செய்து, ஷிகி, இது எப்படி இருக்கிறது? எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு, தவானும் ஈமோஜியுடன் பதிலளித்தார். கோலியின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

ALSO READ |  டி-20 போட்டியில் அம்பயரை வம்பிழுத்த பந்த்: வைரல் வீடியோ

விராட் கோலி (Virat Kohli) அந்த வீடியோவில், "ஷிகரின் பேட்டிங் ஸ்டைலை இன்று நான் பிரதிபலிக்கிறேன்" ஏனென்றால் அவர் நமக்குள் எங்கோ தொலைந்து போகிறார் எனக் கூறியுள்ளார். 

வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பை 2021 இல் ஷிகர் தவான் இந்திய அணியின் ஒரு பகுதியாக இல்லை. சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2021 (IPL 2021) இன் 16 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அவர் மொத்தம் 587 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் 14வது பதிப்பில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில், தவான் நான்காவது இடத்தில் இருந்தார்.

இந்த பட்டியலில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதலிடத்திலும், அவரது பங்குதாரர் டு பிளெசிஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

தவான் கடைசியாக ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். தவான் தலைமையிலான இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியா 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

ALSO READ |  ஆலோசகராக தோனி: விராட் கோலியின் கருத்து என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News