விராட் கோலி தான் இந்திய கிரிக்கெட் அணி தோல்விக்கு காரணமா?
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ஆட்டத்தின் போது விராட் கோலி பர்கர் தின்றது தான் காரணம் என இணையவாசிகள் வருத்து வருகின்றனர்!

எட்க்பாஸ்டன், பிர்மிங்க்ஹாம் மைதானத்தில் நடைப்பெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.
வெற்றி ஆசையினை ரசிகர்களுக்கு காட்டிய இந்திய வீரர்கள் கடைசி 7 ஓவரில் ஆட்டத்தின் போக்கை நேருக்கு எதிராக மாற்றினர். குறிப்பாக மகேந்திர சிங் டோனி, கேதர் ஜாதவின் ஆட்டம் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. அதேவேளையில், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவை கலைக்கவே இந்தியா இத்தகு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது எனவும் இணையவாசிகள் விமர்சித்து வந்தனர்.
இதற்கிடையல் இறுதி ஓவரின் போது இந்தியா வெற்றிக்கு திணறி வந்த நிலையில், அணித்தலைவர் விராட் கோலி பதற்றம் ஏதும் இன்றி பர்கர் தின்றதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. இந்நிலயைலி கோலியின் இந்த புகைப்படத்தை கொண்டு இணைய வாசிகள் ‘இந்தியாவின் தோல்விக்கு கோலியின் பர்கர் தான் காரணம்’ என கிண்டல் செய்து வருகின்றனர்.