நம்பர் ஒன் பந்துவீச்சாளர் பூம்ராவின் பந்துவீச்சை போல் விராட் கோலி பந்துவீச முயன்றுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2016-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து இந்தியாவுக்கு ஒரு முதுகெலும்பாய் இருந்து வருகிறார் ஜாஸ்பிரிட் பூம்ரா. சுமார் இரண்டு ஆண்டுகளாக, இந்த வேகப்பந்து வீச்சாளர் தனது திறமைகளை 50 ஓவர் வடிவத்தில் செதுக்கி வருகின்றார்.


கடும் பயிற்சிகளின் மூலம் தன்னை வளர்த்துக் கொண்ட பூம்ரா, இப்போது இந்திய அணிக்கு ஒரு முரட்டு சக்தியாக இருக்கிறார். 



அவர் விடாமுயற்சி அவரை ICC-யின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கே கொண்டு சென்றுள்ளது.  அகமதாபாத்தில் பிறந்த வேகப்பந்து வீச்சாளர் தற்போது உலகக் கோப்பையின் இந்த பதிப்பில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றார்.


அவர் தனது குறுகிய வாழ்க்கையில் இவ்வளவு வெற்றியை ருசித்துள்ளார், ஆர்வமுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் அவரது பந்துவீச்சு நடவடிக்கையை பின்பற்றத் தொடங்கியுள்ளனர், ஆனால் தற்போது இந்திய கேப்டன் விராட் கோலியும் கூட பூம்ராவின் பந்துவீச்சு நடவடிக்கையினை பின்பற்றி வருகின்றார் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?


ஆம் நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்பு விராட் கோலி பூம்ராவை போல பந்து வீச முயன்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.