Instagram இல் வைரலாகும் நடிகர் சித்ராவின் கடைசி வீடியோ!
சென்னை நசரேத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா அங்கு தற்கொலை செய்துக் கொண்டார்
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைகாட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றவர். சென்னை நசரேத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா அங்கு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த செய்தி வெளியாகி சின்னத்திரை உலகையே உலுக்கிவருகிறது.
பலரும் சமூக வலைதளங்களில் சித்ராவின் (Chitra) மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சித்ராவில் உடலை கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். விரைவில் திருமணம் (Marriage) நடைபெறவிருந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | VJ Chithra Suicide: பாண்டியன் ஸ்டோரேஸ் முல்லை தற்கொலை: பிரபலங்கள் அதிர்ச்சி
இந்நிலையில் இன்று அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படப்பிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார். தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். சித்ரா ஹேமந்த்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாக்வும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.
கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சித்ரா கலகலப்பானவர், அனைவருடனும் சுமூகமாகவும், நட்புடனும் பழகுபவர். தைரியமானவர் என்பதுஅனைவருக்கும் தெரியும். இந்த கொரோனா காலகட்டத்தில் அனைவரும் லாக்டவுனில் வீட்டில் இருந்தபோது, சமூக ஊடகங்கள் டப்-மேஷ் மூலமாக அவர் மிகவும் சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். சித்ராவின் மரணம் சின்னத்திரை முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது டிவிட்டர் பக்கத்தில் இருந்து அவரது நேர்மறையான சிந்தனைகள் தெரிகிறது.
ALSO READ | TV Serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா தற்கொலை காரணம் என்ன?
சித்ரா தற்கொலை தொடர்பாக ஹோட்டல் நிர்வாகிகள், ஹேமந்த் என பலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். சித்ராவின், தொலைபேசி உரையாடல்கள், மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யப்படும். தொழில்முறையில் சித்ராவுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்ததா, அவருக்கு யாராவது மிகவும் அழுத்தம் கொடுத்தார்களா என்பது போலீசார் விசாரணையில் தெரியவரும்.
இதற்கிடையில் சித்ரா (VJ Chitra) தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் பகிர்ந்த வீடியோக்கள் ஒன்று வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் (Instagram) ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை இந்த வீடியோக்களை 14 மணி நேரத்திற்கு முன்பு சரண்யா உடன் ஒரு நிகழ்ச்சியின் படப்பிடிப்பைப் பார்த்தார்.
ALSO READ | பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தற்கொலை: நிச்சயிக்கப்பட்டவரிடம் தங்கியிருந்த நிலையில் ஏன் தற்கொலை!
காதலில் விழுந்தபின் தொலைபேசியில் மிகவும் பிஸியாக இருப்பதாகக் கூறி தொலைபேசியில் பேசும் சித்ராவை சரண்யா கிண்டல் செய்வதைக் காணலாம்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR