ஓட்டுநர் தூங்கியதால் பேருந்து கவிழ்ந்த விபத்து! நெருப்பில் சிக்கி பெண் உயிரிழந்த பரிதாபம்
Accident Video Viral: ஹைதராபாத்தில் இருந்து ஜோகுலாம்பா கட்வால் மாவட்டம் வழியாக சித்தூருக்குச் சென்று கொண்டிருந்த தனியார் வால்வோ பேருந்து விபத்து வீடியோ!!
தெலுங்கானாவில் தேசிய நெடுஞ்சாலை 44இல் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிருடன் எரிந்து சாம்பலானார். பலர் தீக்காயங்களுடன் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். பேருந்து ஓட்டுநர், கண் அசந்துப் போனதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து கவிழ்ந்து விபத்து காணொளி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விபத்துக்குள்ளான பேருந்து, ஹைதராபாத்தில் இருந்து ஜோகுலாம்பா கட்வால் மாவட்டம் வழியாக சித்தூருக்குச் சென்று கொண்டிருந்தது. தனியார் வால்வோ பேருந்து விபத்து வீடியோவை பார்க்க பயமாக இருக்கிறது.
இன்று காலையில் நடைபெற்ற் விபத்தின்போது, ஓட்டுநர் தூங்கிவிட்டதால், விபத்து ஏற்பட்டுள்ளது. அதிவேகத்தில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து திடீரென கவிழ்ந்ததில் தீப்பிடித்தது. பேருந்தில் இருந்த பயணிகள் விரைவாக வெளியேறினார்கள். ஆனால் ஒரு பெண் தீயில் சிக்கி உடல் கருகி இறந்தார். இறந்த பெண் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
வால்வோ பேருந்து கவிழ்ந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். அனைவரும் வெளிவந்த நிலையில், ஒரு பெண் மட்டும் எப்படி வெளியே வராமல் உள்ளே சிக்கிக் கொண்டார் என்ற கேள்வி எழுகிறது.
மேலும் படிக்க | புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுங்கள்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்
ஜோகுலாம்பா கட்வால் போலீசார் கருத்து
ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு சென்று கொண்டிருந்த ஜெகன் அமேசான் டிராவல் பஸ் கவிழ்ந்ததில் அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. டிரைவர் தூங்கியதால் பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து கவிழ்ந்ததை அடுத்து, பயணிகள் அனைவரும் வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தனர்.
ஆனால் ஒரு பெண்ணின் கை பேருந்தில் சிக்கியது. இதனால் குறித்த பெண் சரியான நேரத்தில் வெளியே வர முடியாமல் தீக்குள் சிக்கியுள்ளார். மற்றவர்கள் சிக்கிக் கொண்ட பெண்ணை காப்பாற்ற முயன்றனர், ஆனால் தீ, மளமளவெனப் பரவியதால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
நெருப்பில் சிக்கிக் கொண்ட அந்தப் பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இந்த விபத்தில் மேலும் சில பயணிகளும் லேசான காயம் அடைந்தனர். பயணிகளின் சாமான்களும் தீயில் எரிந்து போய்விட்டன. பெண்ணை அடையாளம் காண முடியவில்லை. இந்த விபத்தின் வீடியோவும் வெளியாகி உள்ளது.
தெலுங்கானாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 2023 நவம்பரில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் தெலுங்கானாவில் 22,230 விபத்துக்கள் நடந்துள்ளன, இது 2022 இல் 21,619 ஆகக் குறைந்துள்ளது.
இருப்பினும், 2018 ஆம் ஆண்டில் விபத்துக்களில் 2,064 பேர் இறந்துள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டில் இறப்பு எண்ணிக்கை 3,010 ஆக உயந்துள்ளது. அதன்படி பார்த்தால், கடந்த 5 ஆண்டுகளில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 45.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | ஆபாச படம் பார்த்தவர்களுக்கு ஆப்பு வைத்த கும்பல்..கப்பென பிடித்த போலீஸார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ