கடை வாசலில் விளையாடி கொண்டிருந்த 2.5 வயது பெண் குழந்தை கடத்தப்பட்து ஆறு மணி நேரத்தில், போலீசாரால் மீட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை சாக்கி நாக்கா பகுதியில் கடை ஒன்றின் வாசலில் 2.5 வயது பெண் குழந்தை விளையாடி கொண்டு இருந்தது. அப்போது அங்கு ஓர் இளைஞன், அந்தக் குழந்தையை கடத்திச் சென்றான். குழந்தையை காணவில்லை என பெற்றோர் பதறியபடி போலீசில் புகார் கொடுத்தனர்.


இதையடுத்து இருந்த ஒரு சிசிடிவி கேமராவை கண்காணித்து ஆறு மணி நேரத்தில் போலீசார் குழந்தையை மீட்டனர். கடத்தல்காரன் கைது செய்யப்பட்டான். தற்போது அந்த கடத்தல்காரனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்