எதிர்பாராமல் நடக்கும் பல விஷயங்கள் இணையவாசிகளை வெகு விரைவாக ஈர்த்துவிடுகிறது.  குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்கிற பழமொழி காலங்காலமாக சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக மனிதனுக்கும் குரங்கிற்கு இடையேயான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.  வைரலாகி வரும் இந்த வீடியோவில் (Viral Video), விடுமுறையை மெக்சிகோவில் ஒரு குடும்பம் கழிக்கிறது, அங்கு ஒரு குரங்கு பால்கனியில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவரின் கைகளுக்கு நேராக ஏறி அவர் மீது உட்காருகிறது.  அந்த குரங்கு அவரின் மார்பின் மீது சாய்ந்து கொண்டு உறங்குகிறது, அவர் அதை குழந்தையை போல தடவி கொடுத்து அரவணைப்பாக வைத்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ALSO READ | Puppies Cute Video: கடும் குளிரில் நாய் குட்டிகள் குளிர் காய ‘தீ’ மூட்டிய கருணை மனம்!


இந்த வீடியோ Doodnews Movement எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  அதில் "காதல் உலகளாவியது, இந்த குரங்கு ஏதோ அன்பிற்காக பால்கனியில் ஏறியது, பின்னர் அவர் தனது இயற்கையான வாழ்விடத்திற்கு திரும்பினார்" என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ அந்த பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.  அவர்கள் தங்கள் சொந்த இடுகைக்கு பதிலளிக்கும் போது, ​​"நான் எல்லா விலங்குகளையும் நேசிக்கிறேன், ஆனால் மற்றவற்றை விட குரங்குகளுக்கு என்று என் மனதில் மென்மையான இடம் இருக்கிறது" என்று கூறினார். 


 



இந்த வீடியோ வைரலாக பரவி மக்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.  இதனை பார்த்த ஒரு பயனர், ”அன்பைக் காட்டும் மற்றொரு வீடியோ!” என்று கமெண்ட் செய்துள்ளார்.  மற்றொருவர் , ”என்னை பைத்தியம் என்று தான் அழைக்க வேண்டும், ஏனெனில் நான் குரங்கால் இரண்டு முறை கடி வாங்கி எமெர்ஜென்சி ரூமில் இருந்தும் கூட நான், இதுபோன்று குரங்கு வீடியோவில் இருப்பதை போல நானும் இருக்க ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.


ALSO READ | பாய்ந்தது பாம்பு, பக்கத்தில் எலி, பலியானதா எலி? அங்கதான் ஒரு சின்ன ட்விஸ்ட்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR