Funny Video: 'இது என்னோட ஏரியா'; அன்னப் பறவையின் அட்டகாசம்..!!!

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் தனியாக பிரித்து எடுக்கும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என புராண நூல்களில் கூறப்பட்டுள்ளதை நாம் அனைவரும் படித்திருப்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 26, 2022, 06:03 PM IST
Funny Video: 'இது என்னோட ஏரியா'; அன்னப் பறவையின் அட்டகாசம்..!!! title=

சமூக வலைதள உலகில் வேடிக்கைக்கும், சந்தோஷத்திற்கும், வியப்பிற்கும் பஞ்சமே இல்லை. தினம் தினம் பலர்  வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு சமூக ஊடக பயனர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்கள். 

மகிழ்ச்சியாக இருப்பதையும், சிரிப்பதையும் யார் தான் விரும்ப மாட்டேர்கள். இந்த ஒரு ஒரு சிறிய வீடியோ கிளிப்பைப் பார்த்தால்,  சிரிக்காதவர்கள் இருக்க முடியாது. இந்த வேடிக்கையான வீடியோக்கள் மக்களை சிரிக்க வைக்கும் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்படுகின்றன. அப்படி ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் தனியாக பிரித்து எடுக்கும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என புராண நூல்களில் கூறப்பட்டுள்ளதை நாம் அனைவரும் படித்திருப்போம். இந்த வைரல் வீடியோவில் (Viral Video) அன்னம் ஒரு சிறுவனை தாக்கும் வேடிக்கையான  விடியோவில் காணலாம். 

திடீரென தண்ணீரில் குதித்த சிறுவனைப் பார்த்ததும் ஏனோ அந்த அன்னப்பறவைக்கு பிடிக்க வில்லை. அது தனது ஏரியா இவன் எப்படி வரலாம என நினைத்ததோ, அல்லது அவனை சீண்டி பார்க்கலாம் என நினைத்ததோ என்னவோ... அது பாயந்து வந்து செய்த செயலை பார்த்தால், வயிறு குலுங்க சிரிப்பீர்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

ALSO READ | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!

வைரலாகி வரும் இந்த வேடிக்கையான வீடியோவில், அன்னம் ஒன்று தண்ணீரில் ஒய்யாரமாக நீந்துவதைக் காணலாம். அப்போது ஒரு சிறுவன் ஓடி வந்து குதிக்கிறான். சிறுவனின் இந்த செயலால் எரிச்சல் அடைந்த அன்னம் அவனை துரத்துகிறது. அன்னம் தன்னை நோக்கி வருவதைக் கண்டு சிறுவனும் வேகமாக தண்ணீரை விட்டு வெளியேற முயற்சிக்கிறான். ஆனால் அன்னப்பறவை  அவனைப் விடுவதாக இல்லை. சிறுவனின் ஆடையை பிடித்து இழுக்கிறது.

வீடியோவை இங்கே காணலாம்:

 

 

இந்த வேடிக்கையான வீடியோ வைரலானது. அன்னம் மற்றும் சிறுவனின் இந்த வீடியோ biltekpluss என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. அன்னம் செய்த செயலை பார்த்து செயலை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்துக்கொண்டதை வீடியோவில் காணலாம். வீடியோ மில்லியன் கணக்கான வ்யூஸ்களையும் லைக்குகளையும். பெற்றுள்ளது.

ALSO READ | Viral Video: 'அட நான் தானா அது'; குட்டி குரங்கின் க்யூட் ரியாக்‌ஷன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News