வீடியோ: அபுதாபியில் பிரதமர் மோடியின் புகைப்படம்!
பிரதமர் மோடி பதவியேற்றதை கொண்டாடும் வகையில், அபுதாபியில் உள்ள கட்டடம் ஒன்றில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பிரதமர் மோடி பதவியேற்றதை கொண்டாடும் வகையில், அபுதாபியில் உள்ள கட்டடம் ஒன்றில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும், பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த கோலாகலமான விழாவில், நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், அபுதாபியில் உள்ள பிரபல வணிக நிறுவனமான அன்நாக் நிறுவன கட்டடத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்திய தூதர் நவ்தீப் சூரி வெளியிட்டு இருந்தார்.