Viral Video: மணமகளும் தோழியர் பட்டாளுமும் போட்ட அட்டகாசமான ஆட்டம்..!!
திருமண விழாவில் ஒரு நடன வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில் மணப்பெண்ணும் தோழியர் கூட்டமும் தங்கள் அற்புதமான நடனத்தினால், சுற்றியுள்ளவர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர்.
Viral Video: திருமண சீசன் வந்துவிட்டது, ஆடம்பரமான திருமணங்களில் நிகழும் சுவாரஸ்யமான நிகழ்வுகள், ரசிக்கத்தக்க நிகழ்வுகள், சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அதில் சில அனைவரையும் கவரும் வகையில் உள்ளன.
திருமணம் (Marriage) என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். பாட்டு, நடனம் இல்லாத திருமணம் ஒன்று இருக்க முடியுமா என்ன..! அப்படிப்பட்ட ரசிக்க தகுந்த ஒரு நடன வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் மணப்பெண்ணும், அவரது தோழியர் பட்டாளமும் நடத்திய அற்புதமான நடன நிகழ்ச்சி அனைவர் மனதையும் திருடி விட்டது.
வீடியோவில், மணமகள், Bluffmaster படத்திலிருந்து சே நா சே நா என்ற பாடலுக்கு தனது அதோழியர் பரிவாரங்களுடன் நடனமாடுவதைக் காணலாம். அவர்கள் உற்சாகத்துடனும் பெப்பி பாடலுக்கான நடனத்தை ஆடுவதை பார்த்த போது, வந்திருந்த விருந்தினர்களுக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. இஸ்ரானி போட்டோகிராபி எனப்படும் இன்ஸ்டாகிராம் ஹேண்டில், ”Dancing onto love’s favorite tunes!” என்று பெயரிட்டு, இந்த வீடியோவை (Viral Video) பகிர்ந்துள்ளது,
வீடியோவை இங்கே பாருங்கள்:
நவம்பர் 5 ஆம் தேதி பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ 8900 க்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளியுள்ளது. அழகான நடன நிகழ்ச்சியைப் பாராட்டி பல கருத்துகளையும் பெற்றுள்ளது. கருத்துப் பிரிவில் காதல் மற்றும் இதய ஈமோஜிகள் மற்றும் ‘ஆஹா’ மற்றும் ‘அற்புதம்’ போன்ற கருத்துகள் நிறைந்துள்ளன.
சில நாட்களுக்கு முன்பு வைரலான இதேபோன்ற வீடியோவில், டெஷரின் பிரபலமான பாடலான 'ஜலேபி பேபி'க்கு ஒரு மணப்பெண் தனது தோழியர் அணியுடன் நடனமாடுவதைக் காண முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Viral Video: திருமண மேடையில் 'Out of Control' ஆன மணமகன், மேடையிலேயே செய்த காரியம்!!