பெங்களூரில், சாலையில் இருந்து நடைபாதைக்கு பாய்ந்த கார் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூரில் உள்ள HSR லே அவுட் என்ற இடத்தில் நேற்று மாலையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென அந்த கார் சாலையோரம் திரும்பி அங்கிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு பின்னர் அருகில் இருந்த நடைபாதையில் ஏறி அங்கிருந்தவர்கள் மீது மோதியபடி நின்றது. இதில் நடைபாதையில் இருந்த கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தோர், அந்த வழியே நடந்து சென்றோர் என ஆண்கள் மற்றும் பெண்கள் பலத்த காயமடைந்தனர்.



இந்த விபத்தில் சுமார் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காரை இயக்கிய ராஜேந்திரா என்ற ஓட்டுநர் குடிபோதையில் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், நடைபாதைக்கு பாய்ந்து, நடந்து சென்றவர்கள் மீது மோதி அவர்களை தூக்கி வீசியது.  


இந்த விபத்தில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் கார் ஓட்டுநர் ராஜேந்திராவைக் கைது செய்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை எபடுத்தி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.