மற்ற விலங்குகளை விட பூனைகளின் குறும்பு செயல்கள் நகைச்சுவையாகவும், மனதிற்கு ஆறுதலாகவும் அமைகிறது.  இவை கிட்டத்தட்ட புலியின் உடலமைப்பை கொண்டுள்ளது, இருப்பினும் புலிகளை விட வலிமை குறைந்த உயிரினமாக தான் பார்க்கப்படுகிறது.  ஆனால் இங்கு பகிரப்பட்டுள்ள வீடியோக்கள் தொகுப்பை பார்த்தால் அப்படி சொல்லிவிடமுடியாது, ஏனெனில் இந்து பூனையை பார்த்து புலி பயந்து நடுங்குகிறது.  புலி மட்டுமல்ல கொடிய விஷ பாம்பும் பூனையிடம் தோற்று ஓடுகிறது.  பூனையின் செயலை பார்த்து எந்த மிருகங்கள் எல்லாம் பயந்து தலைதெறிக்க ஓடுகிறது என்கிற காட்சி ஒரு தொகுப்பாக இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.  அந்த காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்திருப்பதோடு நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: அஸ்ஸாமில் சாலையை ஹாய்யாக கடந்து சென்ற பெரிய்ய்ய்ய மலைப்பாம்பு..!!


இந்த வீடியோவானது ட்விட்டரில் ஃபிகன் என்கிற கணக்கு பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவின் முதல் கிளிப்பில் புலி ஒன்று கூண்டுக்குள்ளும், பூனை ஒன்று கூண்டுக்கு வெளியேயும் உள்ளது, புலி உறுமுவதை கண்டு பூனை பாய்ந்தோடும் என்று பார்த்தல் பூனை கத்தியதை பார்த்து புலி பயப்படுகிறது.  அடுத்த கிளிப்பில், கடற்சிங்கம் ஒன்று பூனையை பார்த்து மீண்டும் நீருக்குள் ஓடிவிடுகிறது, அடுத்ததாக முதலையிடம் ஒரு பூனை வம்பு இழுக்கிறது, பூனையுடன் போராடமுடியாத முதலை ஓடிவிடுகிறது.  அடுத்த கிளிப்பில் ஒரு பெட்டிக்குள் இருக்கும் பூனையை நோக்கி கருமை நிறத்தில் விஷ பாம்பு ஒன்று வருகிறது, அதனை விரட்ட பூனை முயல்கிறது, திடீரென அந்த பாம்பும் பூமியை சமாளிக்க முடியமால் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடிவிடுகிறது.  


 



அடுத்ததாக கூண்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிங்கத்திடம் பூனை ஒன்று சேட்டை செய்கிறது.  அதனையடுத்து மற்றொரு பூனை கரடியிடம் வீண் வம்பிற்கு சென்று கரடியை துரத்திக்கொண்டு ஓடுகிறது, கரடியும் பூனையை பார்த்து பயந்து வேளியை தாண்டி குதித்தெல்லாம் ஓடுகிறது.  இந்த காட்சிகள் பலரின் கவனத்தை நொடிப்பொழுதில் ஈர்த்துள்ளது.  இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 13 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்கிற பழமொழியை இந்த பூனைகள் செய்து காட்டிவிட்டது, தன்னை விட வலிமை மிகுந்த விலங்குகளை சிறிய பூனைகள் விரட்டி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR