அவ்வப்போது இணையத்தில் பல வீடியோக்கள் பகிரப்பட்டு வைரல் ஆவது வழக்கமாக நடக்கும் விஷயமாகும். இவற்றை காணும்போது இணையவாசிகள் தங்கள் கவலைகளை மறந்து சிரிப்பதுண்டு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் இப்படிப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ இணைய வாசிகளை மகிழ்விப்பதில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மகிழ்விப்பதுடன், இந்த வீடியோ இணைய வாசிகளை குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. 


வைரல் வீடியோவில் (Viral Video), இரண்டு கங்காருக்கள் ஒன்றையொன்று கட்டிப்பிடிப்பது போல் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு இருப்பதைக் காண முடிகிறது. ஆனால், அதற்குப் பிற்கு இரு கங்காருக்களும் ஒன்றுக்கொன்று அடித்துக்கொள்ளத் தொடங்குகின்றன. 


எனினும், இந்த சண்டையும் ஒரு தீவிரமான சண்டையாகத் தெரியவில்லை. இதைப் பார்ப்பதற்கு அண்ணன் தம்பி அடித்துக் கொள்வது போலதான் உள்ளது. 


இந்த சண்டையைப் பார்த்து நாம் அதிசயிக்கும் போதே, நம்மை இன்னும் குழப்பும் விதத்தில், சண்டையிடும் கங்காருக்களை விலக்கிவிட மற்றொரு கங்காரு (Kangaroo) அங்கு வருகிறது. முதலில் மூன்றாவது கங்காரு சண்டையை விலக்கி விடுவதைப் போல தோன்றினாலும், பின்னர்தான் மூன்றாவது கங்காரு இரண்டு கங்காருக்களில் ஒன்றை முத்தமிட முயற்சிப்பது தெரிகிறது. 


ALSO READ: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலாவின் மகள் பங்கேறப்பு- உறுதிசெய்த போட்டோ!


வைரல் வீடியோவை இங்கே காணலாம் 



Nature & Animals  என்ற யூசர் போஸ்ட் செய்த இந்த 15 விநாடிகள் கொண்ட வீடியோவிற்கு 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ் கிடைத்துள்ளன. 


பல ட்விட்டர் பயனர்கள் சிரிக்கும் ஈமோஜிகள் மற்றும் கமெண்டுகளை இந்த வீடியோவுக்கு அள்ளி வீசியுள்ளன. 


‘இது என்ன சண்டையா?’ என சில நெட்டிசன்கள் (Netizens) குழப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள்.


ஒரு இணையவாசி, இந்த கங்காருக்கள் அடித்துக்கொள்வதைப் பார்த்தால், இவை கணவன் மனைவியாக இருக்கக்கூடும் என தோன்றுவதாகக் கூறியுள்ளார்.


ALSO READ: #MeToo: 'அவர் என் உள்ளாடைகளில் கைகளை வைத்தார்...' நடிகையின் MeToo அனுபவம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR