இன்று உலக இமோஜி தினம்: அட்டகாசமான புதிய இமோஜி அறிமுகம்!

நாம் எளிமையாக நமது உணர்வை மற்றவருக்கு புரிய வைப்பதற்கான இமோஜி-யை பயன் படுத்துவோம். ஒரு குறியீடு மொழியாது எப்படி என்று நினைத்திருக்கிறீர்களா?

Written by - Devaki J | Last Updated : Jul 18, 2018, 12:18 AM IST
இன்று உலக இமோஜி தினம்: அட்டகாசமான புதிய இமோஜி அறிமுகம்! title=

நாம் எளிமையாக நமது உணர்வை மற்றவருக்கு புரிய வைப்பதற்கான இமோஜி-யை பயன் படுத்துவோம். ஒரு குறியீடு மொழியாது எப்படி என்று நினைத்திருக்கிறீர்களா?

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களின் ஹீரோ-வாக திகழ்வது இணையம். இணையத்தில் இல்லாதது ஒன்றும் இல்லை. ஒவ்வருவரும் உள்ளங்கையில் உலகத்தை வைத்துக்கொண்டு சுற்றி திரிகின்றனர். நாம் அனைவரும், சமூக வலைதலங்கலான முகநூல், கட்செவியஞ்சல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களை உபயோகிக்கின்றோம். 

இதில் அனைத்தும் நாம் ஒரு ஒற்றுமையான விஷயத்தை பார்த்திருப்போம். அது என்ன வென்றால் சாட்டிங்கின் போது நாம் உபயோகிக்கும் இமோஜி. நாம் சாட்டிங்கில் செய்திகளை அனுப்புகிறோமோ இல்லையோ இமோஜி-க்களை தான் அதிகமாக உபயோகிப்போம். ஹ்ம்ம்ம்.... உணமைதானே!. 

நாம் சாட்டிங்கில் கூற இருக்கும் வார்த்தைகளை இமோஜி-க்கள் முழுங்கிவிட்டனர். இன்றைய அவசர உலகத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே கூட சிரிப்பு, துக்கம், கைகுலுக்கல்கள், பாராட்டுக்கள் என்று எல்லாமும் மென்மையாக சத்தமில்லாமல் இமோஜிக்களாகவே அரங்கேறுகிறது வாட்ஸப்பில். குறிப்பாக சமூக வலைதளங்களில் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 6 பில்லியன் இமோஜிக்கள் உலகெங்கிலும் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. 

இமோஜி-யின் விரிவாக்கம்: 

ஜப்பானிய மொழியிலிருந்து வந்த வார்த்தை இமோஜி. என்றால் வரைபடம் என்றும், மோஜி என்றால் கேரக்டர் என்றும் அர்த்தமாகும். 

முகத்திற்கு நேர் நடக்கும் உரையாடலில் ஒருவரின் கையசைவுகளும் பாடி லாங்குவேஜும் அவரின் குரல் தொணியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை அனைத்தும் பேசுபவரின் எண்ண ஓட்டத்தை அறிய மிகவும் உதவும். ஆனால், ஆன்லைன் உரையாடல்களில் ஒருவரின் எண்ண அலைகளை கணிப்பது சிரமம். சில நேரங்களில் ஒருவர் சொல்லும் விஷயம் முற்றிலும் தவறுதலாக புரியக் கூடிய சூழ்நிலைகளும் உள்ளது. 

இது போன்ற சிக்கல்களை ஆன்லைன் உரையாடல்களில் தவிர்க்க பெரிதும் உதவுவது இந்த இமோஜிக்கள். ஒரு செய்தியின் முடிவில் சேர்க்கப்படும் சரியான இமோஜி அந்தச் செய்தியின் பொருளையும் அதற்கு நாம் அளிக்க இருக்கும் விளக்கத்தையும் நிர்ணயிக்கும் திறம் கொண்டது. நேரில் நாம் ஒரு சிரித்த முகத்தைப் பார்க்கும்போது நமது மூளைக்குள் சில பகுதிகள் புத்துணர்ச்சி பெற்று நம்மையும் சிரிக்க செய்யும். அதேபோல் சிரிக்கும் இமோஜிக்களும் நம் மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

நாம் ஆன்லைன் பேச்சுவழக்கில் இமோஜிக்களை உபயோகப்படுத்துவது ஒரு நெருங்கிய தோழமை உறவையும், முற்போக்கு சிந்தனை உணர்வையும் ஏற்படுத்துகிறது. இந்த இமோஜிக்கு ஆரம்பமாக விளங்கியது ":-)" என்ற குறியீடுதான். பின்னர் மக்கள் lol, ROFL, omg என்று வார்த்தைகளை சுருக்கி பேச ஆரம்பித்தார்கள். இவ்வாறு சுருக்கி வரையப்பட்ட இந்த வார்த்தைகள் இப்போது இமோஜிக்களாக வெளிவந்தது. 

முதன் முதலாக இன்ஸ்டாகிராம் செயலி தான் இமோஜிக்களை ஹேஷ்டேக் மூலம் உபயோகம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் எந்தெந்த இமோஜிக்களை எந்தெந்த தருணங்களில் உபயோகப்படுத்துகிறார்கள் என்று கணக்கிட முடியும். 

1. சிரித்து சிரித்து ஆனந்த கண்ணீர் வருவதை போல உள்ள இமோஜியில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஒன்றாகும்.

2. இரண்டு ஹார்ட் போன்ற கண்களைக் கொண்ட, அழகு என்பதை உணர்த்தும் இமோஜி இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. 
 
3. ஹார்ட் இமோஜி மூன்றாவதாக பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. 

4. தம்ப்ஸ் அப் இமோஜி ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.

5. அழுகை முகம் கொண்ட இமோஜி 11 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
 
இமோஜிக்கள் ஆயிரக்கணக்கில் பெருகி விட்டதால் நாம் அதனை உபயோகிக்கும் முன்னர் எந்த இமோஜிக்கள் எதனை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

இன்றைக்கு நீங்கள் எந்த இமோஜி-யை அதிகம் உபயோகித்துள்ளீர்கள் என்று உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா?. 

 

Trending News