இணைய உலகத்தில், தினமும் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. தினம் தினம், புதுமையான, வேடிக்கையான, அதிர்ச்சியான, திகிலான வீடியோக்கள் பலவற்றை காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணைய உலகில் நம்பவே முடியாத வேடிக்கையான மற்றும் அற்புதமான வீடியோக்கள் பலவற்றை காணலாம். ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்பட்டாலும், சில வீடியோக்களே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.  அந்த வகையில் தற்போது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் அணில் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.


வாய் பேச முடியாத விலங்குகள் மற்றும் பறவைகளிடம் மனிதன் கருணை காட்ட வேண்டும். ஏனென்றால், அவை தனது வலியை வேதனைகளை  வெளியில் சொல்ல முடியாதவை. 


கொளுத்தும் வெயிலில் தாகத்தினால் வாடும் ஒரு அணிலின் தாகத்தை ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி, மக்களின் இதயங்களை வென்று வருகிறது. வீடியோவில், ஒரு பெண் தாகத்தில் இருக்கும் அணிலுக்கு தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். 


மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்


சாலையோரத்தில் ஒரு பெண் அணில் பாட்டிலில் தண்ணீர் குடிக்க உதவுவது வீடியோவில் உள்ளது. அணில் தனது குட்டி கால்களை ஊன்றி எழுந்து நின்று வேகமாக தண்ணீரை உறிஞ்சுகிறது. அந்த பெண் பொறுமையாக பாட்டிலைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். 


இந்த வீடியோ ட்விட்டரில் Buitengebieden என்ற கணக்கில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவுக்கு, “நீர் சத்துடன் இருங்கள்..” என தலைப்பிடப்பட்டிருந்தது.


வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ 1.6 மில்லியன் பார்வைகள் மற்றும் 7300 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களுடன் வைரலாகியுள்ளது.பெண்ணின் இந்த மனதைக் கவரும் செயலை பலர் பராட்டியுள்ளனர். அணிலுக்கு உதவிய பெண்ணுக்கு பலர் நன்றி தெரிவித்தனர்.


மேலும் படிக்க | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!


மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR