Watch: போதையில் காவலர் மீது காரை ஏற்றிய வாகன ஓட்டுனர்...
குருக்ராம் நகரில் குடிபோதையில் சுமார் 100 மீட்டருக்கும் மேலாக போக்குவரத்து இயக்குநரை காரில் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
குருக்ராம் நகரில் குடிபோதையில் சுமார் 100 மீட்டருக்கும் மேலாக போக்குவரத்து இயக்குநரை காரில் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
குருக்ராம்: குடித்துவிட்டு காரை இயக்கி வந்த ஒருவரை, அப்பகுதி போக்குவரத்து காவலர் தடுத்துநிருத்த்யுள்ளார். அப்போது போதையில் இருந்த அந்த கார் ஓட்டுனர் அந்த போக்குவரத்து காவலர் மீது கார் ஏற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவமானது, புகத்தான் கிழமை காலை (இன்று) மில்லேனியம் நகரத்திற்கு அருகில் நடந்துள்ளது. சாலையில் அவர் தனது வாகனத்தை தவறான பக்கத்தில் இயக்கி வந்துள்ளார். அப்போது போக்குவரத்து காவலர் அவரை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.
ஆனால், அந்த ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததால் காரை நிறுத்துவதற்கு பதிலாக காவலர் மீது காரை ஏற்றியுள்ளார். போலீசாரை அடித்து கிட்டத்தட்ட 200 மீட்டர் வரை இழுத்துச் சென்றார்.
இதையடுத்து, தற்போது குற்றம் சாட்டப்பட்டவர் தில்லி வசிப்பவர் மற்றும் பின்னர் குர்கிராம் பிரிவு 29 போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.