ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 போட்டித் தொடரான பெண்கள் Big Bash கிரிக்கெட் லீக் மிகப்பிரபலம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் 3-வது லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை எல்லிஸ் பெர்ரி, சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். 


அப்போது அவர் சிக்ஸருக்கு விளாசிய பந்து பார்வையாளர்களிடத்தில் இருந்த சிறுவனின் 
தலையில் பலமாகத் தாக்கியது. இதனால் அச்சிறுவனம் அங்கு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தான்.


உடனடியாக களத்தில் இருந்த எல்லிஸ் பார்வையாளர்களிடத்துக்கு ஓடிச்சென்று அச்சிறுவனின் நிலை குறித்து பார்வையிட்டார். மேலும், அந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வரை உடனிருந்தார்.


உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டான்.


எல்லிஸ் அடித்த பந்து பார்வையாளர்கள் அரங்கில் இருந்த ஒரு தடுப்பின் மீது மோதி அந்த சிறுவனைத் தாக்கியதாக பார்வையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.