Watch: தாய் நாடு திரும்பியதும் உற்சாகத்தில் நடனமாடும் மாணவர்கள்!!
இந்திய மாணவர்கள் சீனாவிலிருந்து இந்தியா வந்தடைந்த பின்னர் சந்தோசத்தில் நடனமாடும் காட்சி இணயத்தில் வைரல்..!
இந்திய மாணவர்கள் சீனாவிலிருந்து இந்தியா வந்தடைந்த பின்னர் சந்தோசத்தில் நடனமாடும் காட்சி இணயத்தில் வைரல்..!
சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் உள்ள ஊகான் நகரில், கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து தலைநகர் பெய்ஜிங் உட்பட சீனாவின் பல்வேறு நகரங்களுக்கும் அது பரவியது. மேலும், சீனாவிலிருந்து, இரண்டு டஜனுக்கும் அதிகமான நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவிலிருந்து, இந்தியா வரும் சீனர்களுக்கும், சீனாவில் வசிக்கும் வெளிநாட்டினரில் இந்தியா வருவோருக்கும் வழங்கப்படும் இ-விசா நடைமுறையை, மத்திய அரசு தற்காலிகமாக ஒத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது.
இதற்கிடையில், இந்திய மாணவர்கள் சீனாவிலிருந்து இந்தியா வந்தடைந்த பின்னர் சந்தோசத்தில் நடனமாடும் காட்சி இணயத்தில் வைரலாகி வருகிறது. மானேசரில் உள்ள தனிமைபடுத்தபட்ட முகாமில் அவர்கள் தங்கியிருந்தபோது, ஆண்கள் குழு, முகமூடி அணிந்து, ஹரியான்வி பாடலுக்கு நடனமாடியுள்ளனர். 15 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ பிப்ரவரி 2 ஆம் தேதி (இன்று) தனஞ்சய் குமார் என்ற பயனரால் ட்விட்டரில் பகிரப்பட்டது. இந்த வீடியோ சுமார் 60,000 பார்வையாளர்களை எட்டியுள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை, "யூகிக்க ????" என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். தங்களின் துன்பங்களுக்கு மத்தியில் மற்றவர்களிடம் மகிழ்சியை கொண்டு வருகிறது இந்த வீடியோ. இந்த வீடியோ பதிவிற்க்கு, நெட்டிசங்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கபட்டுள்ளது.