கடந்த 45 ஆண்டுகளாக கண்ணாடி சாப்பிட்டு உயிர்வாழும் வினோத மனிதன்!!
மத்தியப்பிரதேசத்தில் வழக்கறிஞர் ஒருவர் கண்ணாடிப் பொருட்களை சாப்பிடுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது!
மத்தியப்பிரதேசத்தில் வழக்கறிஞர் ஒருவர் கண்ணாடிப் பொருட்களை சாப்பிடுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ஒரு வழக்கறிஞர் தயரம் சாஹு கடந்த 40-45 ஆண்டுகளாக கண்ணாடி சாப்பிட்டு வரும் சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் டிண்டோரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தயரம் சாஹு என்பவர் கடந்த கடந்த 40-45 ஆண்டுகளாக கண்ணாடிதுகள்களை சாப்பிட்டு வருவதாகவும், இந்த பழக்கத்திற்கு தான் அடிமையாக இருப்பதாகவும் அவர் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ ரீதியாக இந்த நிலைக்கு ஹையலோபாகியா (Hyalophagia) என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த கோளாறால் பாதிக்கப்பட்டவர் கண்ணாடிகளை சாப்பிட அல்லது மெல்ல வேண்டும் என்ற தூண்டுதல் அவர்களுக்கு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் அதன் விளைவுகளை நன்கு அறிந்திருந்தாலும், அவர்கள் இந்த பழக்கத்தை நிறுத்த முழுமையாக முயற்சிக்க வேண்டும்.
இதுவரையில் கண்ணாடி துகளை கடுக் மொடுக்கென்று சாப்பிடுபவரை திரைப்படத்தில் மட்டுமே பார்த்திருப்போம். ஆனால், இவர் நிஜ வாழ்கையில் கண்ணாடித்துகளை சாப்பிடுவது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இதுகுறித்து அவர் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; கண்ணாடியை உண்பது தமக்கு போதைப் பழக்கம் போல் ஆகி விட்டதாக கூறியுள்ளார். இந்தப் பழக்கத்தால் தனது பற்கள் பலமிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இது உடலுக்கு தீங்கானது என அறிவுரை கூறியுள்ளார். மற்றவர்கள் தன்னை போல் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள அவர், கண்ணாடியை சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.