சிங்கத்துடன் மோதும் வரிக்குதிரை; வல்லவன் வாழ்வான் என்பது இது தானோ..!!
தற்போது பெண் சிங்கம் ஒன்றூக்கும் வரிக்குதிரைக்கும் இடையில் நடக்கும் ஒரு போராட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும், நம்மை ஆச்சர்யத்தை கொடுக்கக் கூடிய அல்லது வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது பெண் சிங்கம் ஒன்றூக்கும் வரிக்குதிரைக்கும் இடையில் நடக்கும் ஒரு போராட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இந்த காணொளி, உங்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். காட்டில் வரிக்குதிரைக்கும் சிங்கத்துக்கும் இடையே நடக்கும் கடும் சண்டை, வல்லவன் வாழ்வான் என்பதை மீண்டும் உணர்த்துகிறது.
காட்டில் பெண் சிங்கம் ஒன்றுக்கும் வரிக்குதிரைக்கும் நடக்கும் போராட்டத்தை காகாண வரிக்குதிரைகள் கூட்டம் அங்கே வருவதைக் காணலாம். ஆனால், ஒரு வரிக்குதிரை கூட, சிங்கத்துடன் போராடும் வரிக்குதிரையை காப்பாற்ற தைரியம் இல்லாமல் வேடிக்கை பார்ப்பதையும் வைரல் வீடியோவில் காணலாம்.
மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!
வரிக்குதிரை மற்றும் சிங்கம் இடையிலான போராட்டத்தின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் சிங்கத்துக்கும் வரிக்குதிரைக்கும் இடையே சண்டை நடப்பதைக் காணலாம். இந்தக் காட்சிகளைக் காண வரிக்குதிரைகளின் படையும் வந்திருந்தது. வீடியோவைப் பார்க்கும்போது, வரிக்குதிரையும், சிங்கமும் சண்டையிடுவதற்கான இடத்தை ஏற்கனவே தீர்மானித்தது போல் தெரிகிறது. வீடியோவின் முடிவில், சிங்கத்தை அடித்துவிட்டு வரிக்குதிரை ஓடுவதையும், சிங்கம் பார்த்துக்கொண்டே இருப்பதையும் காணலாம்.
மேலும் படிக்க | Viral Video: 10வது மாடியிலிருந்து தொங்கும் குழந்தை; மனதை பதற வைக்கும் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR