காவல்நிலையம் வரவேற்பறையில் காத்திருந்த பார்வையாளரை திடீர் என தாக்கிய பாம்பு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள் அது என்னவோ உணமைதான். பாம்பு பார்க்க சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம் பல மடங்கு பலமானது என்று கூறுவார்கள். இருந்தாலும் சிலர் பாம்பை மன தைரியத்துடன் கையில் பிடிப்பதும் உண்டு. அவர்களை பார்த்தால் பலரும் ஆச்சர்யப்படுவார்கள். இது போன்ற ஒரு சம்பவம் தாய்லாந்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நடந்துள்ளது. தாய்லாந்தில் உள்ள காவல்நிலையத்தில் காத்திருந்த ஒருவரை திடீர் என அங்கு வந்த பாம்பு அவரை தக்க முயன்றுள்ளது. 


ஆனால், அவர் பதற்றத்தில் அந்த பாம்பை கையில் பிடித்துள்ளார். அந்த காட்சியானது அங்கு பொருத்தப்பட்டுள்ள CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. அந்த வீடியோ பதிவில், அபிக்கட் சௌடொங்கொங் என்பவர் காவல் நிலையத்தின் வரவேற்ப்பு அறையில் அமர்ந்து கொண்டுள்ளார். அப்போது, வெளிப்புற கதவு வழியாக சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பு உள்ளே வருகிறது. ஆனால், அபிக்கட் சௌடொங்கொங் அந்த பாம்பை கவனிள்ள வில்லை. பின்னர் அந்த பாம்பு அவருக்கி மிக அருகில் வைத்துள்ளது அப்போது அதை கண்ட அந்த நபர் பதட்டம் அடைகிறார். பின்னர் அந்த பாம்பு அவரை  தாக்க முயல்கிறது. அப்போது, அவரும் அந்த பாம்பை தனது காலால் மிதிக்கிறார். ஆனாலும் அந்த பாம்பு அவரை மீண்டு தாக்க முயல்கிறது. 


இதையடுத்து, அவர் தனது பாதங்களுக்கு இடையில் அந்த பாம்பை பிடித்துள்ளார். அந்த பாம்பு அவரின் காலில் சுற்றிக்கொள்கிறது. பின்னர் அவர் அந்த பாம்பிப் தலையை பிடித்து தூக்கியுள்ளார். இதையடுத்து, அங்குள்ள காவல் ஒருவரிடம் இதை காண்பித்து கூறியபோது அந்த பாம்பை கண்டு அந்த காவலர் அஞ்சிகிறார். பின்னர் அந்த பாம்பை வெளியில் சென்று விட்டு விடுமாறு கூறிய பின்னர் அவர் காவல் நிலையத்தின் வெளிப்புறத்தில் அந்த பாம்பை விடுதலை செய்கிறார். இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.....