கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் இன்று வெடிவைத்து தகர்க்கப்பட்ட வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலம் கொச்சி அருகே மரடு பகுதியில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த கட்டிடங்களில் 350-க்கும் அதிகமான வீடுகள் இருந்தன. மொத்தம் 240 குடும்பங்கள் இந்த 4 கட்டிடங்களிலும் தங்கி இருந்தனர்.


இந்நிலையில் இந்த கட்டிடங்கள் அனைத்தும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் 4 கட்டிடங்களையும் இடித்து அகற்றுமாறு கடந்த ஆண்டு மே மாதம் கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் அங்கு வீடு வாங்கியவர்களுக்கு ரூ.25 லட்சம் வீதம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.


இதனை தொடர்ந்து கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கான பணிகளை அக்டோபர் 18-ஆம்  தேதி முதல் கேரள அரசு மேற்கொண்டது.


இதையடுத்து நேற்று பகல் 11.17 மணி அளவில் எச் 2 ஓ ஹோலி பெய்த் கட்டிடம் முதலில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. பின்னர் சில நிமிட இடைவெளியில் ஆல்பா செரீன் கட்டிடமும் தகர்க்கப்பட்டது. இடிபாடுகள் மீது தண்ணீரை பீய்ச்சி புழுதி கட்டுப்படுத்தப்பட்டது.


 



 


அதை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் ஆகிய இரு கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இந்த கட்டிடங்களில் வசித்து வந்த குடியிருப்புவாசிகள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கட்டிடம் இடிக்கும் பணிகள் நடந்த இடத்தில் 1,600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.