மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட வந்தவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மேற்கு பகுதியில் பாண்டூப் என்ற இடத்தில் ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் நேர்ந்ததுள்ளது. கடந்த 4-ம் தேதி இங்கு சாப்பிட வந்த ஒருவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து புகையை வெளியேற்றது. 


இந்த சம்பவம் ஏற்பட்டதையடித்து அங்கு சம்ப்பிட வந்தவர்க்கள் பதறிப்போனார்கள். பாக்கெட்டில் செல்போன் வைத்து இருந்த அந்த நபர் தனது சட்டை பையில் இருந்து செல்போனை வீசி ஏறிந்தார். இதில் அவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. செல்போன் வெடித்த மறுநொடியில் அங்கு சாப்பிட வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி.கேமிராவில் பதிவாகி உள்ளது. மேலும் அந்த சி.சி.டி.வி.கேமிரா பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.