பள்ளி விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான மதுக்கர் குக்டே மாணவிகளுடன் நடனமாடும் வீடியோ வைரளாகி வருகிறது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான மதுக்கர் குக்டே (Madhukar kukde) பண்டாரில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகளுடன் மேடையில்  நடனமாடும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரளாகி வருகிறது.
 
பந்தாரா - கொண்டியா பகுதியில் உள்ள பள்ளியில் கலைநிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் அகலந்து கொண்ட அந்த தொகுதி 'ஆங்க் மேரே' பாடளுக்கு ஒரு மாணவி நடனம் ஆடுகையில் MP  உற்சாக மிகுதியால் தானும் மேடையில் அந்த குழந்தையுடன் நாதம் ஆடியுள்ளார். இந்த சம்பவம் அங்கு கூடி இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


இந்த வீடியோ காட்சியை ANI செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. மேலும், அந்த வீடியோவில் பாரம்பரிய மராத்தி பாணியில் உடையணிந்த சில பெண் மாணவர்கள், மேடையில் மூத்த தலைவர்களுடன் நடனமாடினர்.



குக்டே முன்னர் பாரதிய ஜனதா கட்சி (BJP) உறுப்பினராக இருந்தார் மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மூன்று முறை பதவிக்கு Tumsar தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். பாண்டரா-கோண்டியாவால் வாக்கு மூலம் குக்தே 48,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.வின் ஹேமந்த் பாட்டீலை தோற்கடித்தார். 


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது செயல்பாட்டை விமர்சித்து பகிரங்கமாக விமர்சித்த BJP MP நனா பட்டோலால் மக்களவை உறுப்பினரிலிருந்து விலகினார்.