உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் விளையாட உள்ள நிலையில், அபிநந்தன் பிடிபட்டதை கிண்டல் செய்து பாகிஸ்தான் வெளியிட்ட விளம்பம்!!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூன் 16 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானின் ஜாஸ் டிவி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்ட போது, வெளியான வீடியோவை மிமிக் செய்து விளம்பரம் வெளியாகி உள்ளது. அதில் அபிநந்தனை போல தோற்றம் கொண்ட மாடல் ஒருவர், ட்ரேட்மார்க் மீசையுடன் கையில் டீ கப்புடன், நீல நிற ஜெர்சே அணிந்து கேமராவிற்கு பதிலளிக்கிறார்.


உலகக்கோப்பையில் இந்தியாவின் விளையாட்டு மற்றும் டாஸ் வென்றால் அணியின் உத்தி என்னவாக இருக்கும் போன்ற கேள்விகளுக்கு  “நான் இதனை உங்களிடம் சொல்லக்கூடாது, என்னை மன்னித்து விடுங்கள்” என்ற அபிநந்தனின் பதிலையே அதில் நடித்தவரும் அளிக்கிறார். பின்னர் டீ எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, அருமையாக இருந்தது என்று விளம்பரத்தில் வரும் நபர் கூறுகிறார். பின்னர் நீங்கள் போகலாம் என்று சொன்னவுடன், அவர் கிளம்பும்போது அவர் கையில் இருந்த டீ கப்பை வாங்கிக்கொள்கின்றனர்.



அபிநந்தன் பிடிபட்ட போது, இரு நாடுகளுக்கு இடையே உச்சபட்ச பதற்றம் அதிகமான சூழல் நிலவியது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையை கிண்டல் செய்து விளம்பரம் எடுத்தது, பாகிஸ்தான் விளம்பர நிறுவனத்தின் மோசமான தேர்வையே காட்டுகிறது. மேலும் விளம்பரத்தில் நடித்தவரின் முகம் கருமையாக காட்டப்பட்டது இனவெறியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.