லிப்லாக் வீடியோ வைரல்: டோலிவுட் சூப்பர் ஸ்டார் ராணா டக்குபதி (Actor Rana Daggubati) மற்றும் அவரது மனைவி மிஹீகா (Miheeka Bajaj) இருவரின் திருமணம் கடந்த வருடம் நடைபெற்றது. அந்த திருமணத்தின் போது நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவில் திருமணத்தின் போது இருவரும் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்ளும் (Liplock Video) காட்சி இடம் பெற்றுள்ளது. திருமண அலங்கரிப்பில் மிஹிகா மிகவும் அழகாக இருக்கிறார். இந்த திருமணத்தில் தென்னிந்திய திரையுலகின் பல பிரபலங்கள் விருந்தினராக கலந்து கொண்டனர். ராணா தனது மணமக்களுடன் வித்தியாசமான போஸ் கொடுப்பதைக் காணலாம். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள மிஹிகா, "சரியான போட்டி" என்று எழுதியுள்ளார்.


இந்த வீடியோவில் இருவரும் முத்தமிட்டு அன்பை பரிமாறிக்கொள்வது இருவரின் முகத்திலும் தெளிவாகத் தெரியும்.


 


 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by miheeka (@miheeka)


ALSO READ |  Health Tips: அன்பின் அடையாளம் முத்தத்தின் நன்மைகள்!


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜை தனது நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் (Rana Daggubati Marriage) செய்துகொண்டார். 


தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. 2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் ராணா டகுபதி. பாகுபலி படம் மூலம் மிகவும் புகழ் உச்சத்தை அடைந்தார். இவர் தமிழில் ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 



ALSO READ | மிஹீகா பஜாஜை திருமணம் செய்துக் கொண்டார் ராணா டகுபதி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR