2009 ஆம் ஆண்டு வெளியான "தீராத விளையாட்டுப் பிள்ளை" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஸ்ரீ, பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2005 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஆஷிக் "பானய ஆப்னே" என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமனார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த போது, 


பாலிவுட்டில் நான் நடத்துக் கொண்டு இருக்கும் போது பலமுறை எனக்கு பாலியல் தொந்தரவு தரப்பட்டது. பாலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார்கள். அதில் நானா படேகரும் ஒருவர். அவர் 2008 ஆம் ஆண்டு "ஹார்ன் ஓகே ப்ளீஸ்" (Horn ok pleassss) என்ற இந்திப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அந்தப் பாடல் படப்பிடிப்பின்போது நானா படேகர், தகாத இடங்களில் கை வைத்தார் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதைப்பற்றி படக்குழுவினரிடம் முறையிட்டேன். ஆனால் யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. மாறாக நானா படேகருக்கு ஆதரவாகவே பேசினார்கள். நானா குறித்து தவறாகப் பேசக் கூடாது என்று மிரட்டினார்கள். எனது வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. அடியாட்களால் நான் வலுக்கட்டாயமாக படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன் எனக் கூறினார். பத்து வருடத்திற்கு முன்பே, இதுப்பற்றி புகார் செய்தேன். ஆனால் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை எனக் கூறியிருந்தார்.


இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் நடிகை தனுஷரி தத்தா மீதான தாக்குதலின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.