காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணச் செய்தியை கேட்டதும் கடவுள் மேல கொஞ்சம் வெறுப்பும் வருகிறது என்று நடிகர் ரோபா சங்கர் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல சின்னத்திரை காமெடி நடிகரான வடிவேல் பாலாஜி (Vadivel Balaji) உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். முன்னணி காமெடி நடிகர் வடிவேலு போன்று தோற்றத்தை உடைய, நகைச்சுவையில் வடிவேலுவை பின்பற்றும் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த நடிகர் பாலாஜி. இவர் வடிவேல் பாலாஜி என்று தான் அனைவராலும் அழைக்கப் படுவார். பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சிறந்து விளங்கியவர் இவர். 


 


ALSO READ | உடல்நலக்குறைவு காரணமாக காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்


இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதம் ஏற்பட்டு முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 42 ஆகும். வென்டிலேட்டர் ஆதரவில் இருந்த பாலாஜி, பின்னர் அவரது குடும்பத்தால் நிதி நிர்வகிக்க முடியாததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நகைச்சுவை நடிகர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 15 நாட்களாக சிகிச்சையில் இருந்தார். அவரது உடல்நலத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நடிகர் இன்று அதிகாலை காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வடிவேல் பாலாஜியின் மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உயிர் பிரிந்த செய்தி கேட்ட பல சினிமா பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் நெருங்கிய நண்பர் ரோபா சங்கர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.,


 



 


 


மரணமடைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நாளை மதியம் சேத்துப்பட்டு இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.