மனிதனின் தொண்டையில் சிக்கிய மர அட்டையை மருத்துவர்கள் உயிருடம் நீக்கியுள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் ஒரு பெண்ணின் தொண்டையில் சிக்கிய அரியவகை மர அட்டையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் நீக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஹா ஜிங்ங் மாகாணத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவர் கடந்த சில வாரங்களாக தொண்டை மற்றும் தலைவலியால் கடுமையாக அவாதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, இவர் மருத்துவமையை நாடுயுள்ளார். அப்போது அவரி பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் தொண்டையில் மர அட்டை ஒட்டியுல்தை கண்டறிந்துள்ளனர். 


இதையடுத்து, அதை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்துள்ளனர். அந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வீடியோவாக பதிவு செய்து, அதை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


அந்த வீடியோ பதிவில் , பெண்ணின் மேல் உணவுக்குழாய் அறுவைசிகிச்சைகளை நீக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். அந்த வீடியோவானது சுமார், 1 நிமிட மற்றும் 30 வினாடிகளை கொண்டதாக அமைந்துள்ளது. 


இதையடுத்து, அந்த பெண்ணின் வாயிக்குள் ஒரு சாதனத்தை விட்டு அந்த ஒட்டுண்ணியை பிடித்து வெளியில் இழுத்துள்ளனர். அப்போது அது உயிருடன் நெளிந்து கொண்டவாறு வாயிலிருந்து வெளியில் அகற்றப்பட்டுள்ளது. 


அந்த ஒட்டுண்ணி சுமார் 3 இஞ்ச் நீளமானதாக இருந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இந்த வாம்பயர் புழு கடந்த மூன்று மாதங்கள் வரை அந்த பெண்ணின் தொண்டைக்குள் "வாழ்ந்து கொண்டிருப்பதாக" தெரிவித்துள்ளனர். வசந்த நீரில் அதாவது அருவியில் குளிக்கும் போது நோயாளியின் தொண்டைக்கும் அறியாமையால் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.