வானத்திலிருந்து வந்த iPhone X; சரியான நேரத்தில் கேட்ச் பிடித்த இளைஞர்!

ரோலர் கோஸ்டரில் இருந்து விழுந்த செல்போனை சரியான நேரத்தில் கேட்ச் பிடித்த இளைஞர்!!
ரோலர் கோஸ்டரில் இருந்து விழுந்த செல்போனை சரியான நேரத்தில் கேட்ச் பிடித்த இளைஞர்!!
ரோலர் கோஸ்டர் பயணத்தை (roller coaster ride) பெரும்பாலும் சாகசத்தை விரும்பும் மனிதர்கள் மேற்கொள்வார்கள். இந்த பயணத்தை மேற்கொள்பவர்கள் அனைவரும் பயணத்தின் போது பயத்தால் பயங்கரமாக கத்தி கூட்சலிட்டாலும் சுவரஷ்யத்தை அனுபவிக்க இந்த பயணத்தை மேற்கொள்வார்கள்.
இந்நிலையில், ஸ்பெயில் நாட்டில் ரோலர் கோஸ்டரில் பயணித்த ஒரு பயணியின் பாக்கெட்டில் இருந்து ’ஐ போன் எக்ஸ்’ மாடல் செல்பொன் கீழே விழுந்தது. உடனே அதை சக பயணி ஒருவர் கையில் சரியான நேரத்தில் கேட்ச் பிடித்துள்ளார். உற்சாகமாக அவர் அந்தரத்தில் சிரித்து, ரோலர் கோஸ்டரில் பயணித்துக்கொண்டிருந்தார். இந்தக் வீடியோ இணையதளத்தில் வைரலாகிவருகிறது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் சாமுவேல் கெம்ப். இவர் தனது குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
இந்நிலையில், ஸ்பெயினில் கேட்டலினா என்ற நகரில் உள்ள போர்ட் அவெண்டுரா என்ற இடத்தில் ஒரு பொழுதுபோக்குப் பூங்காவிற்கு, சாமுவேல் கெம்ப் தனது குடும்பத்தினருடன் சென்றார். அங்குள்ள பிரபலமான ரோலர் கோஸ்டரில் சாமுவேல் கெம்ப் ஏறியுள்ளார், அது மணிக்கு 130 கிமீ வேகத்தில் பயணிக்க, அதில் அவர் உற்சாகமாக பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது சக பயணி ஒருவரிடம் இருந்த ‘ஐ போன் எக்ஸ்’ செல்போன் கீழே விழுந்தது.
உடனே அதைத் தனது வலது கையால் பிடித்து. உற்சாகமாக சிரித்துக்கொண்டே அந்தரத்தில் பயணித்தார் சாமுவேல் கெம்ப். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகிவருகிறது. சாமுவேல் கெம்ப் -ன் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர்.