இன்னும் பயிற்சி வேண்டுமோ...சண்டையிட்டு கடலுக்குள் விழுந்த பூனைகள்!
இரண்டு பூனைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டு திடீரென்று கடலுக்குள் விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
பூனைகள் ஒன்றுக்கொன்று பாசமாக ஆரத்தழுவி கொள்ளும் காட்சிகள் இணையத்தில் எவ்வளவு ரசிக்கப்படுகிறதோ அதே அளவு பூனைகள் ஒன்றுக்கொன்று அடித்துக்கொள்ளும் காட்சிகளும் இணையத்தில் நெட்டிசன்களால் ரசிக்கப்படுகிறது. அதுபோன்று ஒரு காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இரண்டு பூனைகள் சண்டைபோட நினைத்து இறுதியில் இரண்டுமே தண்ணீருக்குள் விழுந்துவிடுகிறது. இந்த காட்சி பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கிறது, பூனைகள் இரண்டும் இந்த எதிர்பாராத சம்பவத்தை நினைத்து அதிர்ச்சியாக இருப்பது கூடுதல் சிரிப்பை வரவைப்பதாக இருக்கிறது.
மேலும் படிக்க | கடற்கரையில் கடற்சிங்கங்களின் அலப்பறை: அரண்டு ஓடும் மக்கள் வீடியோ வைரல்
இந்த காட்சியானது ட்விட்டரில், யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கின்றது. அந்த வீடியோவில், ஒரு சிமெண்ட் சாலையில் இரு பூனைகள் போருக்கு தயாரானது போல எதிரெதிரே நின்றுகொண்டு இருப்பதை காணமுடிகிறது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த இரண்டு பூனைகளும் காற்றில் பறப்பது போல பறந்து ஒன்றையொன்று தாக்கிக்கொண்டு சண்டையிட தொடங்குகிறது. ஆனால் அவை அருகில் கடல் இருந்ததை மறந்துவிட்டது, இரண்டும் காற்றில் பறந்து தாவி சண்டையிட்ட அடுத்த நொடியே எதிர்பாராத விதமாக அந்த கடல் நீருக்குள் இரண்டு பூனைகளும் விழுந்துவிட்டது. பின்னர் ஒருவழியாக இரண்டும் நீரை விட்டு வெளியே வந்து பாறைகள் மீது நின்றுகொண்டு, திருதிருவென்று குளித்துக்கொண்டு நிற்கின்றன.
இந்த சண்டையில் யாருமே ஜெயிக்காமல் கடைசியாக இரண்டுமே தண்ணீருக்குள் விழுந்து பல்ப் வாங்கிவிட்டது. இணையத்தில் நேற்று பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு இதுவரை நாற்பத்தி ஓராயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், பல சிறப்பான கமெண்டுகளும் குவிந்து வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | செயற்கை கட்டிடத்தில் இயற்கையாக எதிரொலிக்கும் பிரபஞ்ச ரகசிய வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ