நாகப்பாம்பு முட்டையிடும் வீடியோ: கோழிகள், பறவைகள் போன்ற பல பறவை இனங்கள் சில நேரங்களில் முட்டையிடுவதைப் பார்க்கிறோம். கோழிகளும் பறவைகளும் முட்டைகளை பொரித்து குஞ்சு பொரிப்பதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் பாம்பைக் கண்டாலே நம்மில் பெரும்பாலானோர் தலை தெறிக்க ஓடுவது தான் முதல் வேலையாக இருக்கும். அது முட்டையிடுவதைப் பார்க்கும் வாய்ப்பு பெரும்பாலானோருக்கு கிட்டியதில்லை எனலாம். பாம்பு வாய் வழியாக முட்டையிடுமா அல்லது வாலின் வழியாக முட்டையிடுமா என்பது பலருக்குத் தெரியாது. அப்படிப்பட்டவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் தெளிவு கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக பாம்புகள் 3 வயது ஆன பிறகு இணைசேர்ந்து முட்டையிடத் தொடங்கும். முட்டையிடும் காலம் வந்ததும், தனியான மிகவும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து முட்டை இடும். தனது குட்டிகளுக்கு வேறு எந்த விலங்காலும் ஆபத்து வராத வகையில் இடத்தைத் தேர்வு செய்யும். மேலும் அங்கே மிதமான தட்பவெப்பநிலை உள்ள இடமாக தேர்வு செய்து முட்டையிடும். 


பாம்புகள் தங்கள் வாலின் அருகே உள்ள ஒரு பகுதியிலிருந்து முட்டையிடும். ஒவ்வொரு பெண் பாம்பும் வால் மூலம் முட்டையிடும். சில சமயங்களில் முழு உடல் பகுதியையும் போர்த்திவிட்டு மீண்டும் நீண்ட நேரம் அப்படியே இருந்து முட்டையிட முயற்சிக்கும். இந்த பாம்பு தன் வலியை வாய் வழியாக வெளிப்படுத்துகிறது. இந்த வீடியோவில் ஒரு நாகப்பாம்பு முட்டையிடும் போது ஏற்படும் வலியை நாம் வீடியோவை பார்க்கும் போது உணரலாம்.


மேலும் படிக்க | Viral Video: கண்களுக்கு விருந்தாகும் பாம்புகளின் காதல் நடனம்... யாரும் பார்த்திராத அரிய காட்சி!


பாம்பு முட்டையிடும் அரிய வீடியோ: 



மழைக்காலத்திற்குப் பிறகு இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. பெண் பாம்புகள் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் உலர்ந்த மேடுகள், குகைகள் அல்லது துளைகளில் முட்டையிடும். இந்த பாம்பு 16 முதல் 33 முட்டைகள் இடும். இந்த முட்டைகள் சுமார் 2 மாதங்களுக்கு (ஏப்ரல் மற்றும் ஜூன் இடையே) குஞ்சு பொரிக்கின்றன. நாகப்பாம்புகள் பிறக்கும்போது 8 முதல் 12 அங்குல நீளம் இருக்கும். சில பாம்பு இனங்கள் முட்டையிடாது, நேரடியாகக் குட்டி போடும். குட்டிகளை ஈன்றவுடன் அவற்றை விட்டு விலகிச் சென்றுவிடும்.


இந்த பாம்பு முட்டையிடும் வீடியோவை ஒடிசாவின் மிகவும் பிரபலமான பாம்பு பிடிப்பவரான மிர்சா எம்.டி ஆரிப் தனது சொந்த யூடியூப் சேனலில் வெளியிட்டார். இந்த வீடியோ பழையதாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் வியப்படைந்துள்ளனர். இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. அதே அளவில் லைக்குகளும் வருகின்றன.


மேலும் படிக்க | Viral Video: பாம்பை கபளீகரம் செய்ய துடிக்கும் ராஜநாகம்; இணையத்தை அதிர வைத்த வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ