Watch Video: சேஸ் செய்து குற்றவாளியை பிடித்த Chennai Cop, viral ஆகும் real சிங்கம்!!
வைரலாகிவிட்ட வீடியோவில், ரமேஷ் பைக்கில் வந்த இரண்டு மொபைல் போன் ஸ்னாட்சர்களை துரத்துவதைக் காண முடிகிறது.
சென்னை: பல அதிரடி ஆக்ஷன் படங்களைப் பார்த்து வளர்ந்த நம் அனைவருக்கும் திருடர்களை ஹீரோ சேஸ் செய்து பிடிக்கும் காட்சிகள் கண்டிப்பாக பிடிக்கும். சமீபத்தில், இப்படி ஒரு காட்சி நிஜத்தில் நடந்தது.
உண்மையான திரைப்பட பாணியில் மொபைல் ஃபோனை பிடுங்கிக்கொண்டு பைக்கில் தப்பிச்சென்ற மொபைல் ஸ்னாட்சரை ஒரு போலீஸ்காரர் துரத்திப் பிடிக்கும் வீடியோ வைரலாகி (Viral Video) வருகிறது. சென்னையைச் சேர்ந்த இந்த காவல் துறை வீரர் தனது செயலால் இணையத்தில் அனைவரின் இதயங்களையும் வென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரேட்டர் சென்னை போலீஸ் கமிஷனர் (Police Commissioner) மகேஷ் அகர்வால் சனிக்கிழமை சப் இன்ஸ்பெக்டர் அன்ட்லின் ரமேஷை, ஃபோன் ஸ்னேட்சரை பிடித்த இந்த சாகச செயலுக்காக பாராட்டியதோடு, இந்த சேஸின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
வைரலாகிவிட்ட அந்த வீடியோவில், ரமேஷ் பைக்கில் வந்த இரண்டு மொபைல் போன் ஸ்னாட்சர்களை துரத்துவதைக் காண முடிகிறது. ஒரு திருடன் தப்பித்து விடுகிறான். மற்றொருவன் பைக்கில் தப்பிக்க முயல்கிறான். இருப்பினும், ரமேஷ் தனது சொந்த பைக்கை விட்டுவுட்டு, தப்பி ஓடும் திருடனைப் பிடிக்கிறார். இந்த முயற்சியில் அவர் கீழே விழுகிறார். இருப்பினும், அவர் சுதாரித்துக்கொண்டு, ஸ்னாட்சரைப் பிடிக்கிறார்.
ரமேஷ் திருடனைப் பிடிக்கும் சி.சி.டி.வி வீடியோவை பகிர்ந்து ட்வீட் செய்த அகர்வால், “இது ஏதோ திரைப்படத்தின் காட்சி அல்ல. நிஜ வாழ்க்கையின் ஹீரோ எஸ்.ஐ.அண்டிலின் ரமேஷ், திருட்டு பைக்கில் தப்பித்துச் செல்லும் மொபைல் ஸ்னேட்சரை தனி ஒருவராக பிடிக்கிறார். இதன் மூலம் மேலும் மூன்று குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு திருடப்பட்ட 11 மொபைல் ஃபோன்களும் மீட்கப்பட்டன” என்று கூறினார்.
அந்த அதிரடி வீடியோவை இங்கே காணலாம்:
"சப் இன்ஸ்பெக்டர் ஆன்டிலின் ரமேஷை சந்தித்து அவருடன் தேநீர் பருகினேன், உரையாடினேன்” என்று மகேஷ் அகர்வால் பின்னர் ட்வீட் செய்தார்.
எஸ்.ஐ. அன்டிலின் ரமேஷுக்கு விருது வழங்கப்படுவதைக் காட்டும் வீடியோவை சென்னை காவல்துறையும் (Chennai Police) ட்விட்டரில் பகிர்ந்து கொண்டது.
நெட்டிசன்கள் இந்த சேஸைப் பார்த்து வியந்து, விரைவான நடவடிக்கைகளை எடுத்து துடிதுடிப்புடன் செயல்பட்டதற்காக ரமேஷை புகழ்ந்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் நடக்கும் போது அங்கு இருந்ததாகக் கூறும் ஒரு பயனர், “யா ... உண்மையில் இந்த செய்திக்காக நான் காத்திருக்கிறேன் ... நானே இந்த சம்பவத்தை நேரில் பார்த்தேன் ... இது என்னை மெய் சிலிர்க்க வைத்தது….. ... எஸ்ஐ அவர்களை விரட்டியடித்தது ஒரு அதிரடி படம் போல இருந்தது... அவருக்கு பாராட்டுக்கள்” என்று எழுதினார்.
ALSO READ: அடிபட்ட நாயை தத்தெடுத்து அதற்காக Special Wheel Chair-ஐ உருவாக்கிய கோயம்பத்தூர் தந்தை மகள்
ALSO READ: வைரல் வீடியோ: பாகிஸ்தான் பத்திரிகையாளரிடம் யானை செய்த சேட்டை
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR