Monkey Pool Party Viral Video: மகாராஷ்டிராவில் கடுமையான வெப்பமும் அனல்காற்றும் வீசுகிறது. மறுபுறமோ கொரோனாவின் அலை, மனிதர்களின் ஆரோக்கியத்தையே அடித்துக் கொண்டு செல்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்கள் வெப்பத்தைத் தீர்க்க நீச்சல் குளத்திற்கு செல்ல முடியாத நிலையில்  தங்கள் வெப்பத்தைத் தணிக்க குரங்குகள் நீச்சல் குளத்தில் டைவிங் செய்து மகிழ்கின்றன.  



மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் COVID-19 கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், மனிதர்கள் தங்கள் வழக்கமான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. மனிதர்களின் ஆடம்பரங்களை சில குரங்குகள் பயன்படுத்தி வருகின்றன.


Also Read | சீனாவின் ராக்கெட் கட்டுப்பாடிழந்து பூமியில் எங்கே வீழும்?


கொரோனா பரவலால் மகாபலேஷ்வரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நீச்சல் குளம் காலியாக இருக்கிறது. மனிதர்களுக்குத் தானே சமூக இடைவெளி, கொரோனா, முகக்கவசம், லாக்டவுன் எல்லாம்?


குரங்குகளை இந்தக் கட்டுப்பாடுகள் எதுவும் கட்டுப்படுத்தவில்லை என்பதால், அவை மனிதர்களின் விருப்பங்களை தங்கள் விருப்பங்களாக நிறைவேற்றிக் கொள்கின்றன.
இது கதையல்ல, உண்மைதான், அதற்கான காட்சி ஆதாரம் வீடியோவில் உள்ளது.


காலியாக இருக்கும் ரிசார்ட்டில் விருந்தினர்கள் இல்லாததால் குரங்குகள் துள்ளி குதித்து விளையாடுகின்றன. நீச்சல் குளத்தில் டைவ் அடித்து குளத்தில் குதிக்கின்றன .


Also Read | வரலாற்றின் பொன்னேடுகளில் May 09 நாளின் முக்கியத்துவம் என்ன?


குரங்குகளுக்கு டைவிங்கும் தெரியும் என்பது வீடியோவில் தெரிகிறது. டைவ் அடித்து நீச்சல் குளத்திற்குள் குதித்து, அங்கே நிதானமாக நீச்சலடிக்கின்றன.


இந்த குரங்கு குறும்புக் காட்சிகளை வீடியோவாக எடுத்தவர்களின் சிரிப்பொலி வீடியோவின் பின்னணியில் இசையாக கேட்கிறது.


ட்விட்டரில் என்.பி.ஏ நட்சத்திரம் ரெக்ஸ் சாப்மேன் பகிர்ந்த வீடியோவை இரண்டு நாட்களில் 2.7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கின்றனர்.  1 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 21,000 ரீட்வீட்களையும் பெற்று குரங்கு குறும்பு வீடியோ இது.  


Also Read | இந்தியாவில் முழு லாக்டவுனை கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR