Viral Video: விஜய் பாடலுக்கு நடனம் ஆடிய டேவிட் வார்னர்
விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் இருந்து செல்ல குட்டி என்ற பாடலுக்கு தான் ஆடுவது போல பேஸ் மார்பிங்; எடித் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர்.
விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் இருந்து செல்ல குட்டி என்ற பாடலுக்கு தான் ஆடுவது போல பேஸ் மார்பிங்; எடித் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர்
ALSO READ | Arya 30: வேற லெவல் தோற்றத்தில் ஆர்யா - வெளியானது பா.ரஞ்சித்தின் அடுத்த அப்டேட்
கொரோனா முதல் அலையின் போது தனது குடும்பத்தினருடன் சேர்ந்து டிக்டாக் செய்து வீடியோக்களை பதிவேற்றி வந்தார் வார்னர். அதிலும் இந்திய மொழி பாடல்கள் குறிப்பாக தென்னிந்திய மொழி பாடல்களுக்கு அவர் நடனம் ஆடி பதிவேற்றப்படும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது. இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய தொடங்கினார்.
தற்போது பேஸ் சேன்ஜர் ஆப்பின் உதவியுடன் வேறெருவர் நடனம் ஆடிய வீடியோவில் தனது முகத்தை எடிட் செய்து தான் ஆடுவது போல பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த வீடியோக்கள் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் சேர் ஆனது. தற்போது விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் இருந்து செல்லக்குட்டி என்ற பாடலுக்கு தனது முகத்தை எடிட் செய்து பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ‘தெறி வார்னர்’ ‘டேவிட் தளபதி வார்னர்’ ‘வார்னர் தளபதி’ என்ற டேவிட் வார்னருக்கு பெயர்களை சூட்டி விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை டிரண்ட் செய்து வருகின்றனர்.
Also Read | Sarpatta Parambarai: இயக்குநர் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை ட்ரெய்லர் வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR