Arya 30: வேற லெவல் தோற்றத்தில் ஆர்யா - வெளியானது பா.ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில்..!

இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படத்திற்கு ‘சார்பட்டா பரம்பரை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது....!

Last Updated : Dec 2, 2020, 01:54 PM IST
Arya 30: வேற லெவல் தோற்றத்தில் ஆர்யா - வெளியானது பா.ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில்..! title=

இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படத்திற்கு ‘சார்பட்டா பரம்பரை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது....!

நடிகர் ரஜினிகாந்தின் ‘காலா’ பட வெற்றிக்குப் பின்னர் ஆர்யாவின் 30-வது படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பா.ரஞ்சித் (Pa Ranjith). இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு (Arya) ஜோடியாக துஷாராவும், கலையரசன், ஜான் கோக்கேன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். KGF படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திரா ராஜு இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

K9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்காக இயக்குநர் பா.ரஞ்சித் முறையாக குத்துச் சண்டை கற்று பின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். நடிகர் ஆர்யா (Actor Arya) இந்தப் படத்துக்காக தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றியுள்ளார். ஆர்யாவைப் போன்றே நடிகர் சந்தோஷ் பிரதாப்பும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை குத்துச் சண்டை வீரர் போல் மாற்றியிருந்தார்.

ALSO READ | ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்யா மீது அவதூறு வழக்கு பதிவு....!

மேலும், இப்படம் வடசென்னை (North Chennai) குத்துச்சண்டை வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இது 1980-களில் நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்ட படம்  என தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்  விரைவில் வெளியாகும் என தீபாவளிக்கு முன்பே, ஆர்யா கூறியிருந்தார். இந்நிலையில், ஆர்யாவின் 30 ஆதாவது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பெயர் மற்றும்  பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டிருந்த நிலையில், இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில், ரோசமான ஆங்கில குத்துச்சண்டை என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித், “இங்க வாய்ப்பு-ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல. இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா” (SarpattaParambarai) என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஆர்யா இத்திரைப்படத்தின் கபிலா என்ற கேரக்டரில் நடித்திருப்பது தெரிய வருகிறது.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News