Viral Video: விஷ பாம்பை அசால்டாக கையாளும் 2 வயது குழந்தை..!!
பாம்பு என்றால் படையும் நடுங்கும். பாம்பை கண்டால் பயப்படாதவர்களை பார்ப்பது அரிது. அதனை பற்றி நினைத்தாலே ஒரு வித அச்ச உணர்வு மனதில் பரவும்.
பாம்பு என்றால் படையும் நடுங்கும். பாம்பை கண்டால் பயப்படாதவர்களை பார்ப்பது அரிது. அதனை பற்றி நினைத்தாலே ஒரு வித அச்ச உணர்வு மனதில் பரவும். ஆனால், இந்த வைரஸ் வீடியோவில் 2 வயது குழந்தை ஒன்று,அசால்டாக விஷப்பாம்புடன் விளையாடுவதைக் காணலாம்.
ஒரு பெரிய பாம்புடன் அந்த குழந்தை தோட்டத்தில் அசால்டாக விளையாடிக் கொண்டிருந்ததை, அந்த குழந்தையின்தந்தை தனது கேமராவின் படம் பிடித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டார். இந்த காணொளியை பார்த்ஹால், அதிர்ச்சியும் ஆச்சருயமும் ஒரு சேர ஏற்படுவதை தவிர்க்க முடியாது. பாம்பைப் பார்த்தால் பயத்தில் ஓடும் நமக்கு, இந்த 2 வயதுடைய ஒரு சிறு குழந்தையின் தைரியம் ஆச்சரியப்படுத்துகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டது. மான்ஸ்டர் க்ரோக் ராங்லர் மாட் ரைட் (Monster Croc Wrangler Matt Wright) வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய பாம்புடன் நெருக்கமாக பழகுவதை காண முடிந்தது. அப்போது அவரது இரண்டு வயது மகன் பேஞ்சோவும் அங்கு இருந்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக, மாட் ரைட் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி முழுவதும் முதலைகளைப் பிடித்து அதனை வேறு இடத்தில் விடும் வேலையில் பணியாற்றி வருகிறார். மேட் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து கொண்ட வீடியோவில் அவர் தனது இரண்டு வயது குழந்தை பாம்புடன் விளையாடுவதை பகிர்ந்துள்ளார்.
ALSO READ | Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!
இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோவில், மேட்டின் மகன் பான்ஜோ, பாம்பின் வாலைப் பிடிப்பதையும் இழுப்பதையும் காணலாம். அது அவருக்கு கை வந்த கலை போல் தெரிகிறது. இதுமட்டுமின்றி, குழந்தை பாம்பின் மிக அருகில் செல்ல முயன்றபோது, மாட் அவரைத் தள்ளிவிடுவதையும் பார்க்க முடிகிறது.
மாட் தனது மகன் பாஞ்சோவுக்கு பாம்பை பார்த்து பயமில்லாமல் இருக்கவும், பாம்புகளை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கவும் கற்றுக்கொடுத்தார். இவர்களைப் பார்த்தால், பாம்புகளுடன் வாழ்வது எளிது போல் தோன்றியது. வீடியோவின் முடிவில் மாபெரும் பாம்பு எந்த அசைவும் இல்லாமல் மாட்டின் கால் அருகே படுத்திருப்பதை நாம் காணலாம்.
மேட் சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராமில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு மகன் பாஞ்சோ சுமார் இரண்டு மீட்டர் நீளமுள்ள ஒரு பாம்பைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைக் காட்டினார். அப்போது பாம்பின் வாய் அருகே செல்லக்கூடாது போன்ற பல நுணுக்கங்ளையும் மாட் ரைட் குழந்தைக்கு கற்றுக் கொடுத்தார்.
ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR