உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை  ஒன்று தனக்கு பிடித்த பாடலை தொலைக்காட்சியில் ஒலிப்பதைக் கேட்டதும் குதூகலிக்கும்  வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகத்தில் அனைவரின் மனதையும்  வென்ற அந்த குழந்தையின் வீடியோ பிள்ளை நோய்க்கு கள்ளமில்லை என்பதை நிரூபித்துள்ளது. பெரும்பாலான குழந்தைகள், உடல் நலம் இல்லாத போது மருத்துவரிடம் அழைத்து செல்லும் போது, மிகவும் அழுவதையும், பயப்படுவதையும் பார்த்திருக்கிறோம். 


ALSO READ | Viral Video: விஷ பாம்பை அசால்டாக கையாளும் 2 வயது குழந்தை..!!


இருப்பினும், மிகுவேல் Miguel என்ற இந்த மழலை  மிகவும் வித்தியாசமான குழந்தையாக உள்ளது.  இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவருக்கு பிடித்த பாடல் டிவியில் வந்த உடன், தன்னை கட்டுபடுத்த முடியாமல் பாடுவதையும் நடனமாடுவதையும் பார்க்கும் போது, அனைவர் மனமும் நெகிழ்ந்து போகு என்பது உறுதி. பிரேசில் நாட்டைச் சேர்ந்த குழந்தையான மிகுவல், அவருக்குப் பிடித்த பாடலை மனதாரப் பாடி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


வீடியோவை இங்கே பாருங்கள்: 



வைரல் வீடியோ கிளிப்பில், மிகுவல் தனக்கு பிடித்த பாடலை தொலைக்காட்சியில் ஒலிப்பதைக் கேட்டாதும் , தன்னிடம் இருந்த ஸ்பூனை மைக் போல கையில் பிடித்து கொண்டு குதூகலமாக ஆடினார். குட்நியூஸ்மூவ்மென்ட் (GoodNewsMovement) என்ற ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்ட பிறகு மிகுவலின் வீடியோ வைரலானது. முட்டி மிகுவல் பாடும் பாடல், PÉRICLES - ATÉ QUE DUROU (AO VIVO). லிட்டில் மிகுவலின் வைரல் வீடியோ 7.5K வ்யூஸ்களையும் நூற்றுக்கணக்கான லைக்குகளையும் குவித்துள்ளது.


ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR