இடியும் மின்னலும் தூரத்திலிருந்து பார்க்கும் போதே நமக்கு திகிலைக் கொடுக்கும் என்றால் மிகையில்லை. தூரத்திலிருந்து. இடி முழக்கத்தை கேட்டாலே சிலருக்கு உடல் நடுங்கும். இடி மின்னலின் போது அதிக வெளியில் செல்வது எப்போதுமே பாதுகாப்பு இல்லை என பெரியவர்கள் எச்சரிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனாலும், பணியில் இருப்பவர்கள் நிர்பந்தம் காரணமாக வெளியில் செல்ல நேரிடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜகார்த்தாவில் உள்ள நிறுவனத்தில் காவலராகப் பணிபுரியும் 35 வயது நபர் ஒருவர் பணியில் இருந்தபோது மின்னல் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் ஜகார்த்தாவின் வடக்கு பகுதியில், கனரக இயந்திரங்கள் தொடர்பான நிறுவனத்தில் காவலராக பணிபுரிகிறார். அவர் ஷிப்டில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியது.



ALSO READ | Aliens: வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா..!!


உள்ளூர் ஊடகங்கள் பகிர்ந்துள்ள வீடியோவில், மழை பெய்து கொண்டிருந்த போது கையில் குடையுடன் அந்த நபர் திறந்த வெளியில் நடந்து செல்வதைக் காணலாம். சில நொடிகளுக்குப் பிறகு, ஒரு மின்னல் அந்த நபரைத் தாக்கியதையும் தீப்பொறிகள் வீடியோவில் பறப்பதையும் காணலாம்.


மின்னல் தாக்கியதை தீப்பொறிகள்  பறந்ததன் மூலம் உணரலாம். உடனே அந்த, நபர் மயங்கி தரையில் விழுந்து கிடப்பதைக் காணலாம். பாதுகாவலர் தரையில் விழுந்த உடன், அவரது சக ஊழியர்கள் அந்த இடத்திற்கு ஓடி வந்து அவருக்கு உதவ கிட்டத்தட்ட ஆறு பேர் அந்த இடத்திற்கு விரைந்தனர்.


 


அந்த நபர் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவரது கையில் சில தீக்காயங்கள் ஏற்பட்டன. ஆனால் அவர் உயிர் பிழைத்துள்ளார். முதலில் கையில் தீக்காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நான்கு நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து உடல் நலம் தேறி வருகிறார்.


பாதுகாவலரின் கையில் வாக்கி டாக்கி இருந்ததால் மின்னல் தாக்கி விபத்து ஏற்பட்டதாக நிபுணர்கள் கருதுகின்றனர். குடையை எடுத்துச் செல்வதும், மின்னல் தாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்றும் சிலர் ஊகித்துள்ளனர்.


ALSO READ | சைக்கிள் ஓட்டி இணையத்தை கலக்கும் பச்சைக்கிளி: வைரலான வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR