வைரல் வீடியோ: தாய் தான் பெற்ற குழந்தைக்காக உயிரை கொடுக்க முடியும், உயிரை எடுக்கவும் முடியும். இந்த உலகில் தாயின் அன்புக்கு ஈடு இணை கிடையாது. ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாக்க தன் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருக்கிறாள். கண் தூங்காமல் உண்ணாமல் அவள் தன் குழந்தையை பேணி காக்கிறாள். தாயின் இந்த பண்பு மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் பொருந்தும். சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் தாய் மயில் வீடியோ இதற்கு சான்றாகும். இதில், தாய் மயில் தான் ஈன்ற முட்டையை காப்பாற்ற என்ன செய்கிறது என்பதைப் பார்த்து உங்களுக்கு ஆச்சர்யம் ஏற்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மயில் முட்டைகளை திருட முயலும் சிறுமி


வைரலாகும் வீடியோவில், ஒரு சிறுமி மயிலின் முட்டைகளை திருட முயல்வதை வைரல் வீடியோவில் காணலாம். இதற்குப் பிறகு, அந்த பெண்ணுக்கு நேர்ந்த கதியை பார்த்தால், உங்களுக்கு வியப்பு மேலிடும். தாய் மயில் அந்தப் பெண்ணுக்கு நல்ல பாடம் கற்பிப்பதை நீங்கள் பார்க்கலாம். இந்தப் பாடத்தை அந்தப் பெண் தன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. மயில் தனது முட்டைகளின் மேல் அமர்ந்து கொண்டு அடை காப்பதை வீடியோவில் காணலாம். அங்கே, ஒரு பெண் அங்கு வந்து மயிலை பிடித்து முன்னோக்கி வீசுகிறாள். 


மேலும் படிக்க | Viral Video: பேச மட்டும் இல்லை வித்தையும் தெரியும்... பேப்பரில் இறக்கை செய்து அசத்தும் கிளி!


வைரலான வீடியோவை கீழே காணலாம்:



 


மயிலை முன்னோக்கி வீசிய பின் தரையில் சிதறி கிடக்கும் முட்டைகளை திருட முயல்வதையும் வீடியோவில் காணலாம். மறுபுறம், மயில் பறந்து வந்து அந்தப் பெண்ணின் மீது பாய்கிறது. அந்த சிறுமி கீழே விழும் விதத்தை பார்த்தால், மயில் எவ்வளவு வலுவாக தாக்கியது என்பதை அறிந்து கொள்ளலாம். இனி அந்த சிறுமி தவறுதலாக கூட இதைச் செய்ய முயற்சிக்க மாட்டார். இந்த வீடியோ  8677 YouTube சேனலால் பகிரப்பட்ட வீடியோ. இதற்கு இணையவாசிகள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


மயில் இந்தியாவின் தேசிய பறவை. மயில் இந்தியாவின் தேசிய பறவையாக 1963 இல் அறிவிக்கப்பட்டது. மயில்கள் கருடனின் இறகுகளிலிருந்து பிறந்த பறவைகள் என்று நம்பப்படுகிறது. ஆண் மயில்களுக்கு மயில் இறகுகள் இருக்கும். ஆண் மயில்கள் பெரும்பாலும் பெண்களை கவரும் வகையில் தங்கள் தோகையை விரித்து நடனமாடுகின்றன. மயில்களும் கூட்டமாக வாழும் பறவைகள். காடுகளில் வாழும் மயில்கள் 10 முதல் 25 ஆண்டுகள் வரையிலும், வளர்ப்பு மயில்கள் 50 ஆண்டுகள் வரையிலும் வாழும் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!


மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ