இணைய தளத்தில் விலங்குகள் தொடர்பான வேடிக்கை வீடியோக்கள் என்றுமே மிக எளிதில் வைரலாகி விடுகிறது. அதுவும் செல்ல பிராணிகளின் வேடிக்கை வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாயைப் போலவே பார்க்க மிக அழகாக இருக்கும் பூனையும் மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. இதனால், நாய்களை போலவே ஒருவகையில் பூனையும் மனிதர்களின் நண்பன்தான்.


சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பூனை ஒன்று அசால்டாக சேவலின் மேல் சவாரி செய்வதைக் காணலாம். க்யூட்டான பூனை இந்த வீடியோ, சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 


சமூக ஊடகங்களில் பூனைகள் மற்றும் நாய்களின் பல அற்புதமான வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். விலங்குகளில், நாய்கள் மற்றும் பூனைகள் மனிதர்களுக்கு மிகவும் பிடித்தவை. பூனை மனிதர்களுக்கு மட்டுமல்ல பிற விலங்குகளுடனும் நல்ல நட்பு உள்ளது என்பதி காட்டும் இந்த வீடியோ உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். 


மேலும் படிக்க | கொஞ்சம் கறந்த பால் ப்ளீஸ்... என கெஞ்சும் அப்பாவி பூனையின் க்யூட் வீடியோ


வைரலாகி வரும் அந்த வீடியோவில் சேவல் ஒன்றின் அருகில் பூனை ஒன்றும் அப்பாவி போல் நிற்பதைக் காணலாம். முதலில் அந்த பூனை சேவலின் முதுகின் மீது ஏற முயற்சி செய்கிறது. பின்னர் சேவலின் மீது ஏறி ஒய்யாரமாக படுத்து கொள்கிறது. 


வைராகி வரும் வீடியோவை இங்கே காணலாம்:



பாவம் அந்த சேவல் பூனையின் கனத்தை தாங்கிக் கொண்டு அதனை சுமந்தபடியே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடந்து செல்கிறது. சேவல் மீது சவாரி செய்யும், பூனைக்கு அது பற்றிய கவலை ஏதும் இல்லை. அது ஒய்யாரமாக சேவலின் மீது சவாரி செய்கிறது. அப்புறம் மனம் இல்லாமல் இறங்கிச் செல்கிறது. 


இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த அழகிய வீடியோவை இதுவரை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருக்கின்றனர். thediscoverylife என்ற இண்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்


மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR