கொஞ்சம் கறந்த பால் ப்ளீஸ்... என கெஞ்சும் அப்பாவி பூனையின் க்யூட் வீடியோ

பூனைகள் அபிமான பிராணியாக இருக்கும். ஆனால் அவை தங்களுக்குப் பிடித்த விஷயங்களில் அதுவும் பால் விஷயத்தில் விடாப்பிடியாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 5, 2022, 05:27 PM IST
கொஞ்சம் கறந்த பால் ப்ளீஸ்... என கெஞ்சும் அப்பாவி பூனையின் க்யூட் வீடியோ title=

செய்வதெல்லாம் செய்து விட்டு அப்பாவியாக இருப்பவரை பார்த்து, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என இருக்கிற பாரு எனவும் பண்றதெல்லாம் பண்ணிட்டு பூனை மாதிரி உட்கார்ந்துட்டு இருக்குற எனவும் பலர் வசை பாடுவதை கேட்டிருக்க கூடும். 

 நாய்க்கு நிகராக பலராலும் விரும்பி வளர்க்க கூடியது பூனை. பூனைகள் அபிமான பிராணியாக இருக்கும். ஆனால் அவை தங்களுக்குப் பிடித்த விஷயங்களில் அதுவும் பால் விஷயத்தில் விடாப்பிடியாக இருக்கும். அழகிய பூனைக்குட்டி ஒன்று விவசாயியிடம் கறந்த பசுவின் பால் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை சத்தீஸ்கரின் ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் ஷரன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், “அனைவரின் சைகையையும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அடக்கடவுளே! யாருமே கிடைக்கலையா... குளத்தில் முதலையுடன் கட்டி பிடித்து நடனம் ஆடும் நபர்!

வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 5,000 ரீட்வீட்களையும், 28k லைக்குகளையும் பெற்றுள்ளது. பிரெஷ் பசுவின் பாலுக்காக, பால் கறக்கும் விவசாயியிடம்,  பூனை கெஞ்சுவதை வீடியோவில் காணலாம். பூனை அவனிடம் பால் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டு அதன் இரண்டு கால்களில் நிற்கிறது. விவசாயி பசுவின் பால் கறப்பதில் மும்முரமாக இருப்பதைக் காணும்போது, ​​பூனை மீண்டும் அவரை தட்டு பால் கொடுக்குமாறு கேட்கிறது.

அழகான பூனை பலமுறை கேட்ட பிறகு,  அந்த நபர் பசுவின் பாலை பூனையின் வாயை நோக்கி பீய்ச்சி அடிக்கிறார். அப்போது பூனை தனது வாயில் பீய்ச்சி அடிக்கும் பால் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் குடிப்பதைக் காண முடிந்தது. நெட்டிசன்கள் இந்த வீடியோவை மிகவும் ரசித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 
பூனையின் இந்த குறும்பு இணையத்தை  கலக்கி வருகிறது. "ஒரு மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான அன்பு நிபந்தனையற்றது" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார். 

மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News