சேவல்- கோழி காதல் வீடியோ: சமூக ஊடக உலகில், தினமும் ஏதோ ஒன்று வைரலாகிறது. ஆச்சர்யமான விநோதமான, திகிலை கிளம்ப்பும் வகையிலான வீடியோக்கள் வைரலாவதை காணலாம். இதுபோன்ற வைரல் வீடியோக்கள் சில சமயம் நம்மை சிரிக்க வைக்கும், சில சமயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சில சமயம் உணர்ச்சிவசப்பட வைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், சேவலுக்கு கோழிக்கும் உள்ள காதலைன் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக, கோழியைக் காப்பாற்ற ஒரு மனிதனுடன் சேவல்  சண்டை போடும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான வ்யூஸ்களை பெற்றுள்ள இந்த வீடியோவை,  ஐபிஎஸ் ரூபின் ஷர்மா தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார். 


அதில், உல்லாசமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த சேவல் கோழியை சீண்டும் வகையில்,  ஒருவர் கோழியை  அதனிடம் இருந்து பிரித்து, அதனை தூக்கி கூண்டில் விடுகிறார். தனது துணையான கோழிய துக்கியவுடன், சேவல் அவர் மீது பாய்ந்து தாக்குகிறது.  ஆனாலும், அந்த நபர் கோழியை எடுத்து வந்து கூண்டில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.


இப்போது இந்த வீடியோவில் எதைப் பார்த்தாலும் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறது. சேவல் உடனடியாக கூண்டை நெருங்கி அதை திறக்க முயற்சிப்பதை நீங்கள் காணலாம். சிறிது நேரம் முயற்சித்தன் பின். முயற்சியில் வெற்றி பெற்று, தனது அன்பான கோழியை விடுவித்தது. இதன் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து விட்டனர். 


வீடியோவை இங்கே காணலாம்:


 



ALSO READ | Viral Video: கேமராவில் சிக்கிய நாகப்பாம்பு Vs கீறி சண்டை


இந்த வீடியோ பல்வேறு தளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அது எப்போது, ​​எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.


ALSO READ | குரங்குக்கு காதல் வந்தா என்ன நடக்கும்? இந்த வீடியோவில் பாருங்க!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR