சமூக ஊடகங்களில் தினமும் பல வகையான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. கற்பனை செய்யவே முடியாத சில காட்சிகளை இவற்றில் காண்கிறோம். இணையத்தில் வெளியாகும் வீடியோக்களில் விலங்குகளின் சேட்டைகள், குறும்புகள் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப காலங்களில் இவை பட்டையை கிளப்பி வருகின்றன. நாம் அருகில் நின்று காண முடியாத சில அரிய காட்சிகளை இந்த வீடியோக்களில் காணலாம்.  அந்த வகையில் தற்போது குரங்கும் சேவலும் சண்டையிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடக உலகில், தினமும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வேடிக்கையான வீடியோக்கள் பகிரப்பட்டு, தொடர்ந்து ஆச்சர்யத்தை அள்ளிக் கொடுக்கின்றன. இந்த வீடியோக்களில் சில வயறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் இருக்கும். தற்போது குரங்கும் சேவலும் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், இரண்டும் ஒரு மலையில் நின்று கொண்டு மோதும் வீடியோ உங்களுக்கு நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


சேவல் குரங்குடன் மோதும் வைரல் வீடியோ


 



 


வைரலாகி வரும் இந்த வீடியோவில், மலையில் ஏற்கனவே குரங்கு ஒன்று அமர்ந்திருப்பதைக் காணலாம். சிறிது நேரம் கழித்து ஒரு சேவல் அதனை நெருங்கி அதனை கொத்த முயற்சிக்கிறது. சேவல் சீண்டிய நிலையில் குரங்கும் விடவில்லை, அது தன் பாணியில் பதில் தாக்குதல் நடத்துகிறது.  சேவல்  குரங்குடன் மோதும் இந்த வேடிக்கையான வீடியோ சமூக ஊடக பயனர்களையும் மிகவும் ரசிக்க வைத்துள்ளது. இந்த   வீடியோ, animalsinthenaturetoday என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அம்மானா சும்மாவா? குட்டியை காக்க சூப்பரா யோசித்த அம்மா குரங்கின் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ