கனடாவைச் சேர்ந்த யுவெஸ் பிஸ்ஸான் என்ற மீனவர் சமீபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மீன்பிடிக்கச் சென்ற போது தனது வாழ்க்கையில் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஒரு மீனை கண்டார். அவர் 'வாழும் டைனோசர்' என்றும் அழைக்கப்படும் 10.5 அடி நீளமுள்ள ஒரு பிரமாண்டமான ஸ்டர்ஜன் என்னும் பிரம்மாண்ட மீனை கண்டார் . தான் இதுவரை கண்டிராத பெரிய ஸ்டர்ஜன்களில் இதுவும் ஒன்று என்று மீனவர் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் 250 கிலோ எடையுள்ள மீனைக் கண்டுபிடித்ததைக் காட்டிய ஒரு வீடியோ, மிக வேகமாக TikTok செயலியில் வைரலானது. கேமராவை நோக்கி ஸ்டர்ஜனின் தலைக்கு எடுத்து காட்ட அவர் சிரமப்படுவதை வீடியோவில் காணலாம். "இதைப் பாருங்கள், இந்த மீன் 10 மற்றும் அரை அடி, அநேகமாக 500, இல்லை 600 பவுண்டுகள் இருக்கும்" என்று வைரல் வீடியோவில் அவர் கூறுகிறார்.


அது கைப்பற்றப்பட்டு அளவிட்ட, ​​மீன்பிடி வழிகாட்டிகள் ஸ்டர்ஜனை RFID சிப்பில் குறியிட்ட பிறகு அதை மீண்டு நீருக்குள் விடுவித்தனர்.  இதற்கு முன்னர், இந்த மீன் கண்ணில் தென்படவில்லை எனவும் அவர்கள் ஆச்சர்யமாக கூறினர். 


மேலும் படிக்க | ஒரு கையில் சிகெரெட்.. மறு கையில் பாம்பு; ரஜினி ஸ்டைலில் பாம்பை பிடிக்கும் பெண்.. !!


ட்விட்டர் போன்ற பிற தளங்களிலும் வீடியோ மிகவும் வைரலானது. வைரலான வீடியோவை கீழே காணலாம்:




Yves Bisson கனடாவின் ஃப்ரேசர் நதியில் வாழும் மீனவர். இவர் ஸ்டர்ஜன் வகை மீன்களில் நிபுணர். தனது கண்ணில் பட்ட ஸ்டர்ஜன் மீனுக்கு 100 வயது இருக்கலாம் என்கிறார் அவர்.


மேலும் படிக்க | கருஞ்சிறுத்தையும் சிறுத்தையும் மோதிக் கொண்டால் எப்படி இருக்கும்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR