'புஷ்பா' படம் வெளியாகி பல மாதங்கள் ஆன போதிலும் இப்படத்தின் பாடல்களும், டயலாக்குகளும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.  இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் நடனமாடி வருகின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்ஸ்டாகிராமில் 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு நடனமாடும் நிறைய ரீல்கள் உள்ளன. இந்நிலையில், ஒரு மிருகக்காட்சிசாலையில்  எடுக்கப்பட்ட காணொலி வைரலாகி வருகிறது. அதில் நீங்கள் ஒரு கொரில்லாவைப் பார்க்க முடியும்.  புஷ்பா படத்தின் பெயரைக் கேட்டாலே, அல்லு அர்ஜுன்  ‘ஸ்ரீவல்லி’ பாடலுக்கு போட்ட ஹூக் ஸ்டெப்தான் பொதுமக்களுக்கு நினைவுக்கு வரும், அந்த வகையில் கொரில்லாவையும் இந்த பாடல் பெரிதும் ஈர்த்து விட்டது போலும்.  


மேலும் படிக்க | 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு டான்ஸ் ஆடிய சவுரவ் கங்குலி!


இந்த வீடியோவில், ஒரு மிருகக்காட்சிசாலையில், ஒரு கொரில்லா தனது கூண்டை விட்டு வெளியஏ வந்து நடந்து செல்வதையும், பின்னர் திடீரென  எழுந்து நின்று,  'ஸ்ரீவல்லி'யின்  ஹூக் ஸ்டெப் போடுகிறது. இதை பார்த்த ஒருவர் அந்த வீடியோவில் ‘ஸ்ரீவல்லி’ பாடலை சேர்த்து வெளியிட்டத்தில் இணையத்தில் வேகமாக பரவி வைரலானது.


வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த அழகான வீடியோ dinesh_adhi என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில்  பகிரப்பட்டுள்ளது. புஷ்பா காய்ச்சல் என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோவிற்கு இதுவரை 11 லட்சம் லைக்குகளையும் 16 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான பயனர்கள் இதற்கு கருத்து தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!


மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR