Viral video: நாகப்பாம்பை ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி
கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது என்று கூறுவார்கள்
கீரி - பாம்பு இரண்டுக்கும் பகை என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். கீரிகள் உள்ள இடங்களில் பாம்புகள் இருக்காது என்றும் கூறுவதுண்டு. கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது என்று கூறுவார்கள்.
பொதுவாக பாம்பு கீரி சண்டையில் பாம்பை கீரி கொன்றுவிடும். பாம்பு படம் எடுத்து கீரியை தாக்கி களைத்துப் போன பின், சோர்வாக உள்ள பாம்பின் தலையை கடித்து கீரி கொன்றுவிடும்.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளியிலும், கீரியின் தாக்குதலுக்கு முன்னால் நாகம் திணறுவதைக் காணலாம்.
வெளியாகியுள்ள வீடியோவில், பல அடி நீளமுள்ள ராஜ நாகம் கிராமத்தில் நுழைந்த நிலையில், கிராம மக்கள் பாம்பை விரட்டிக்கொண்டிருந்தபோது கீரி அங்கு வந்துள்ளது. அது வந்த வேகத்திலேயே பாம்புக்கும் கீரிக்கும் இடையில் ஆக்ரோஷமான போர் மூண்டது. இந்த வீடியோவில், தன்னை தாக்க வரும் கீரியை பாம்பு வேகமாகத் தாக்குவதைக் காணலாம், ஆனால், பின்னர் கீரியின் புத்தாலித்தனமான தாக்குதலுக்கு முன்னால், தாக்குபிடிக்க முடியாமல் திணறியது.
மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!!
வீடியோவை இங்கே காணலாம்
பாம்பு கீரியை தாக்கும் போதே, புல்லட்டின் வேகத்தில் தாக்கி, நாகப்பாம்பு அதிலிருந்து மீண்டு வருவதற்குள் பலமுறை தாக்குகிறது. கீரியின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முன்னால் பாம்பு தாக்குபிடிக்க முடியாமல் போனது.
சில நொடிகளில் நாகத்திற்கு பலத்த காயத்தை ஏற்படுத்திய கீரி இறுதியாக நாகப்பாம்பை வாயில் கவ்விக் கொண்டு காட்டுக்குள் தப்பிச் சென்றது. சிறிய கீரி பாம்பை கவ்விக் ஓடத் தொடங்கியதும் கிராம மக்கள் சத்தம் போட்டு விரட்ட முயன்றதைக் காணலாம். தீபக் ஏர்டெல் சேனலில் இருந்து யூடியூப்பில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகத்திற்கும், கீரிக்கும் நடக்கும் போராட்டத்தை காட்டும் இந்த வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.
மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR