Viral Video: படம் எடுத்து ஆடும் நாகப்பாம்பு ஜோடி வீடியோ -Watch
நாகப்பாம்பின் வைரலான வீடியோ நெட்டிசன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், உங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பது உறுதி.
பீகாரில் உள்ள பாட்னா உயிரியல் பூங்காவில் இதமான காலநிலையில் இரண்டு பாம்புகள் கூலாக விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாகப்பாம்புகளின் வீடியோவை பீகார் அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை முதன்மைச் செயலர் தீபக் குமார் சிங் ட்விட்டரில் பகிர்ந்துள்ளதை அடுத்து, அந்த வீடியோ வைரலானது. வைரலான வீடியோ நெட்டிசன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், உங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பது உறுதி.
பீகார் அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை முதன்மைச் செயலர் தீபக் குமார் சிங் தனது ட்விட்டர் கணக்கில் வீடியோவை பகிர்ந்து கொண்டு, “ஒரு ஜோடி இந்திய நாகப்பாம்பு பாட்னா உயிரியல் பூங்காவில் குளிரான கால நிலையை அனுபவிக்கிறது. அவை படம் எடுக்கும் தோரணையை பார்க்கும் போது அவை ஏன் பூமியின் மிகச் சிறந்த பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன என்பதை உணரலாம். அவற்றின் கர்வமான தோரணை, படம் எடுக்கும் அழகு நம்மை வியக்க வைக்கும் அதே வேளையில், அவற்றின் விஷத் தன்மை நம்மை அச்சுறுத்தவும் செய்கிறது” என கருத்து தெரிவித்துள்ளார்.
ALSO READ | Viral Photo: பாம்பு சட்டை உரித்ததை பார்த்திருக்கிறீர்களா..!!
1.32 நிமிட வீடியோவில், இரண்டு பாம்புகளும் தலையை உயர்த்தி படம் எடுக்கும் பாம்பு காணலாம். மேலும், வீடியோ தொடரும் போது, நாகப்பாம்புகளில் ஒன்று விளையாட்டுத்தனமாக மற்றொன்றைத் தாக்க முயல்கிறது. இவை படம் எடுத்து விளையாடுவதை பார்க்கும் போது, பாம்புகளும் ஜாலியாக விளையாடும் என்பதை உணர முடிகிறது. இந்த குறுகிய வைரல் வீடியோ 2.9 k பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் பல லைக்குகள், கருத்துகள் மற்றும் ரீட்வீட்களை அள்ளியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR