சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. குழந்தைகள் வீடியோ தொடங்கி, விலங்குகள் வீடியோக்கள் வரை பல வைரல் ஆவது வழக்கம். கோவை மாவட்டம் வால்பாறை 956 சதுர கிலோமீட்டர் கொண்ட வனப்பகுதியாகும். இங்கு யானை, காட்டுமாடு, சிறுத்தை, கரடி, புலி, வரையாடு, அபூர்வ இனம் இருவாச்சி, குருவி மற்றும் பிற இன பறவைகள், புள்ளிமான், கடமான்,பாம்பு வகைகள் மற்றும் எண்ணற்ற அபூர்வ இன தாவரங்கள் அதிக அளவில் உள்ளன. தமிழ்நாடு வனத்துறையால் இந்த பகுதி ஆனைமலை புலிகம் காப்பகம் பகுதியாக அரசு அறிவித்து பாதுகாக்கப்பட்ட இடமாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்கள் மீது ஏறிய கார்! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்..


ஆழியார் சோதனை சாவடியில் ஆறு மணிக்குமேல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை என தடை விதித்துள்ளனர். வால்பாறையில் தனியார் காட்டேஜ் ரூம் புக் பண்ணி செல்லும் சுற்றுலா பயணிகள் வனத்துறையால் செல்ல அனுமதி தரப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் வனவிலங்குகள் அதிக அளவில் நடமாட்டும் உள்ளதால் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தாமல் செல்ல வனத்துறையினர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 



கடந்த மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வால்பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி சாலையில் வந்த பொழுது புதுதோட்டம் பகுதியில் சாலை ஓரம் ஒய்யாரமாக அமர்ந்து சிறுத்தை அமர்ந்திருந்ததை கண்ட சுற்றுலா பயணி நடிகர் லிவிங்ஸ்டன் பேசுவது போல நல்லா போஸ் கொடுக்குது கொய்யால எனா பேசி தங்களது மொபைல் போனில் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.


மேலும் படிக்க | ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அந்த நபரையே சுட்டுத்தள்ளிய நபர்!! திக் திக் சிசிடிவி காட்சிகள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ